விஜய்யின் மெர்சல் சாதனையை அருகில் கூட நெருங்க முடியாத ரஜினியின் 2.0 டீஸர்

0
1795
Rajini
- Advertisement -

சிவாஜி,எந்திரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் “2.0” திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்சய் குமார், ரியாஸ் கான் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

yenthiran

- Advertisement -

சுமார் 500 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இந்திய அளவில் மிகவும் பிரமாண்ட பொருட்ச்செலவில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் டீசர் இன்று (செப்டம்பர் 13) வெளியானது.

மிகவும் பிரமாண்டமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படத்தின் சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினியின் “2.0” படத்தின் டீசர் நெருங்க கூட முடியவில்லை.

-விளம்பரம்-

Mersal

விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படத்தின் டீசர், வெளியான 15 நிமிடத்திலேயே 1 லட்சம் லைக்குகளை பெற்றிருந்தது. ஆனால், ரஜினியின் “2.0” படத்தின் டீசெர் 1 லட்சம் லைக்குகளை பெற 37 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது.

இன்று காலை 9 மணிக்கு வெளியான 2.0 படத்தின் டீஸர் தற்போது வரை 2 லட்சம் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதே போல இந்த படத்தின் டீசரை 3843114 நபர்கள் கண்டு கழித்துள்ளனர். இதனால் ரஜினி படத்தின் டீசருக்கு இந்த வரவேற்பு மிகவும் குறைவு தான் என்ற எண்ணம் தோன்றுகிறது.

Advertisement