என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்..!தென்னந்திய அளவில் புதிய சாதனை படைத்த ரஜினி..!2.0 வசூல் எவ்வளவு..!

0
851

இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த திரைபடத்தின் மூலம் ரஜினிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.

மூன்றாம் நாள் முடிவில் இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம் 200 கோடி வசூலை எட்டும் மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ரஜினியின் எந்திரன் கபாலி போன்ற படங்கள் 200 கோடி வசூலை செய்துள்ளது. இதன் மூலம் 3 படஙக்ளில் 200 கோடி வசூல் செய்த ஒரே தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரஜினி.

இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானில் கூட இந்த திரைப்படம் புதிய சாதனையை செய்துள்ளது. முதலில் 25 திரையரங்கில் 2.0 திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை அடுத்து 75 திரையரங்குகளில் தற்போது படம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டே நாளில் 10 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது

மேலும், அமெரிக்காவில் 12 கோடி ரூபாய் வசூலையும் 2.0 திரைப்படம் குவித்துள்ளது. 2.0 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் வார முடிவில் 300 கோடி ரூபாய் வசூலை 2.0 திரைப்படம் குவிக்க வாய்ப்பு உள்ளதாக திரைப்பட வணிக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.