நான் இந்த தேர்தலில் போட்டி இல்லை.! நீங்கள் இவங்களுக்கு வாக்களியுங்கள்.! ரஜினி அறிக்கை.!

0
781
rajini
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மன்ற பெயரையும் கொடியையும் அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால், அவர் அப்போது தேர்தலில் போட்டியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

-விளம்பரம்-

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ரஜினி மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலசோனை நடத்திய பின்னர் ரஜினி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த அறிக்கையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று கூறியுள்ளார். மேலும், தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க யார் செயல்படுவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

ரஜினி வெளியிட்ட அறிக்கை மூலம் அவர் அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் இரண்டு படங்களில் நடித்து விடுவார் என்பது மட்டும் உண்மை. தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 166 வது படத்திலும் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement