இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் “கோலமாவு கோகிலா”. லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதே போல சமீபத்தில் வெளியான இந்த படத்தின் “கல்யாண வயசு” என்ற பாடலில் யோகி பாபு, நயன்தாராவிடம் காதலை சொல்வது போல காட்சி அமைக்கபட்டிருந்தது. இந்த பாடல் வெளியான சில நாட்களிலேயே யூடியூபில் படு ட்ரேடண்டாகியது.
.
வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் அடுத்தடுத்து இரண்டு டீஸர்களை வெளியாகியுள்ளது.வெளியான சில மணி நேரத்திலேயே இந்த படத்தின் டீசர் பல ரசிகர்களால் விரும்பபட்டுள்ளது.
கதாநாயகியை மையபடுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை நயன்தாரா, ஒரு போதை கும்பலில் சிக்கிகொள்ளும் ஒரு பெண் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார் என்ற கதாபத்திரத்தில் நடித்துளளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.