மகளாக நடித்த மீனாவுக்கு ஜோடியாக நடித்தது எப்படி ? பல ஆண்டு விமர்சனத்திற்கு ரஜினியே சொன்ன விளக்கம்.

0
673
Rajinimeena
- Advertisement -

நடிகை மீனாவுடன் நடித்த அனுபவம் குறித்து ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. 1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக மீனா சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படம் தான். அதன் பின்னர் என் ராசாவின் மனசினிலே என்ற படத்தின் மூலம் மீனா கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் ரஜினி, கமல், விஜய், அஜித்,பிரபு,கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மீனா கணவர் இறப்பு:

அந்த வகையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா இந்த படத்தில் ரஜினி உடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனை அடுத்து பல படங்களில் மீனா கமிட்டாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

மீண்டும் படப்பிடிப்பில் மீனா:

மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம். மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்களும் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படி மீனா சினிமாவில் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறது. சமீபத்தில் இதனை விழாவாக கொண்டாடியிருந்தார்கள். மீனா 40 என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களுடைய அழகான நினைவுகளை பகிர்ந்தார்கள்.

-விளம்பரம்-

மீனா 40 விழாவில் ரஜினிகாந்த்:

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீனாவை குறித்து கூறியிருந்தது, எஜமான் படத்தின் கதையை கேட்டு யாரை கதாநாயகியாக போடலாம் என்று இயக்குனர் கேட்டார். நான் இரண்டு மூன்று பேர் சொன்னேன். உடனே அவர் மீனாவை போடலாம் என்று சொன்னார். நான் அப்போது யார் மீனா? எந்த மீனா? என்று கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் என்று சின்ன பெண்ணாக நடித்திருந்தாரே அந்த மீனா என்று சொன்னார். நான் சிரித்துக்கொண்டு அவரா? என்றேன். பின் அவர் தெலுங்கில் மீனா நடித்த இரண்டு படங்களை எனக்கு போட்டு காண்பித்தார்.

மீனா குறித்து சொன்னது:

நான் அப்படியே ஆடிப் போய் விட்டேன். மீனாவா இது! அந்த அமுல் பேபி மீனாவா! இப்படி இருக்கிறார்கள். ரொம்ப அழகா, சாமிங்க மீனா இருந்தார்கள். காலம் இப்படி மாற்றும் என்று எனக்கு தெரியவில்லை. அதற்குப்பின் மீனாவுடன் நான் சேர்ந்து எஜமான் படத்தில் நடித்தேன். அப்படியே வீரா, முத்து போன்ற சில படங்களிலும் நடித்தேன். நானும் மீனாவும் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் தான் கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி ரஜினி பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது

Advertisement