கவலைப்படாதீங்க, படம் பெரிய வெற்றிபெறும்னு சொன்னார் – இமயமலை பயணத்துக்கு நடுவே வெளியான ரஜினி வெளியிட்ட வீடியோ.

0
1816
Rajini
- Advertisement -

ஜெயிலர் படம் குறித்து சுதானந்த்ஜி என்பவர் சொன்னதாக ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான் டிரெண்டிங்காக சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வந்த படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி அடையவில்லை.

-விளம்பரம்-

அதனால் தற்போது இவர் நடித்த ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடாமல் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யூடியூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் நெல்சன் கம்பேக் கொடுத்து விட்டார் என்றெல்லாம் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தின் வசூல்:

மேலும், இந்த படம் இதுவரை உலக அளவில் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளி வந்திருந்த வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களின் ஒரு நாள் வசூலை முதல் நாளிலேயே ரஜினியின் ஜெயிலர் படம் வசூலித்து சாதனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து
இருக்கிறார். இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். அதோடு இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து சுதானந்த்ஜி கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினி அவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். இதனால் இவர் அடிக்கடி இமயமலை செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதோடு சில வருடமாக இவர் படங்கள் பெரியதாக ஓட வில்லை என்பதால் இவர் ஜெயிலர் படம் வெளியாகும் முன் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்.

மேலும், அங்கு எடுக்கப்பட்ட ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி சமாதிக்கு ரஜினி சென்று வழிபட்டு இருக்கிறார்.
அப்போது அவர் அங்கு அனைவரிடமும் பேசி இருக்கிறார். பின் ரஜினி, காலையில் சுதானந்தஜி சொன்னாரு. கவலைப்படாதீர்கள் படம் பெரிய வெற்றி பெறும் என்றார். அவரே சொல்லிவிட்டார் படம் பெரிய ஹிட் தான் என்று பேசியிருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே சுதானந்தஜி கணித்து சொன்னதாக ரஜினி பேசி இருக்கும் தகவல் தான் அனைவர் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Advertisement