திராவிட சிந்தனை குறித்து கஸ்தூரி பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என பல சூப்பர் ஹிட் படங்களில் கஸ்தூரி நடித்து இருந்தார்.
பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். பின் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி அவர்கள் சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ என்ற படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
கஸ்தூரி திரைப்பயணம்:
அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து இருந்தார் கஸ்தூரி . அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால், இவரால் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் நீடித்து நிற்க முடியவில்லை.
#Kasthuri About #PariyerumPerumal pic.twitter.com/ehg7jLzaWo
— chettyrajubhai (@chettyrajubhai) September 6, 2023
சோசியல் மீடியாவில் கஸ்தூரி:
இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் இவர் சமூக பிரச்சினைகள் குறித்து எப்போதும் தைரியமாக பதிவிட்டு வருவார். இவர் எப்போதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் ட்விட் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் திராவிட சிந்தனை ஒரு நோய் என்று கஸ்தூரி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
கஸ்தூரி பேசி இருக்கும் வீடியோ :
அதில் அவர், பரியேறும் பெருமாள் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அந்த படத்தில் ஒரு காட்சியில் மது அருந்தும் ஒரு நபர் கடையில் சட்டையை கழட்டி உட்கார்ந்து இருப்பார். எல்லோரும் ஆடையை சரியாக அணிந்திருக்கும் போது அவர் மட்டும் சட்டை பட்டனை கழட்டி விட்டிருப்பார். என்னவென்று பார்த்தால் அவர் பூணூல் அணிந்து இருப்பது தெரியவந்தது.
Factu factu 🤣
— Kasturi (@KasthuriShankar) September 6, 2023
Did any tamizh channel even debate about Hindu virodhi DMK at all ? https://t.co/siwuDEw8E7
திராவிட சிந்தனை நோய்:
பிராமின் தான் மது அருந்த வேண்டுமா? ஒரு கிறிஸ்தவன், சீக்கியர், முஸ்லிம் மது அருந்தக் கூடாதா? இந்த படத்தின் காட்சிக்கும் இந்த நபர் செய்வதற்கும் சம்பந்தமில்லை. எதற்காக இப்படி தேவையில்லாமல் சித்தரிக்கிறீர்கள். இதெல்லாம் திராவிட சிந்தனையில் நோய் என்று கொந்தளித்து கஸ்தூரி பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.