ஜோடியாக நடித்தா 10 நடிகைக்கு மகனாக நடித்த ரஜினி – யார் யார் தெரியுமா ?

0
627
rajini
- Advertisement -

தென்னிந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. ரஜினிகாந்த் தன்னுடைய கடின உழைப்பினால் படிப்படியாக சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி தற்போது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தன்னை தெரியும் படி பிரபலமாகியுள்ளவர்தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

படையப்பா படத்தில் வருவது போல ரஜினிகாந்திற்கு வாயையே ஆகாது என்பதை போல தனனுடைய தொடக்க காலத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் தற்போது இவருக்கு 71 வயதாகும் நிலையில் இவருக்கு அம்மாவாக நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவரை விட இரண்டு மடங்கு வயது குறைவாக இருக்கும் நடிகைகளுடன் ஜோடியாகவும், அந்த நடிகைகள் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த பதிவில் பிரபலமான அந்த 10 நடிகைகளின் வரிசையை பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

லட்சிமி :

1952ஆம் ஆண்டு பிறந்தார் இவர் ரஜினியை விட 2 வயது சிறியவர், இவர் ரஜினியுடன் பொன்னத்வன், ஸ்ரீ ராகவேந்திரா, நெற்றிக்கண் போன்ற படங்களில் இணைந்து நடிக்க தொடங்கினார். ஆனால் ரஜினியை விட குறைவான வயது இருந்தும் “படையப்பா” படத்தில் இவருக்கும் அம்மாவாகவே நடித்து விட்டார்.

சுஜாதா :

இவர் 1952ஆம் பிறந்தது 2011ஆம் ஆண்டு காலமானார், பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ள இவர் “அவர்கள்” படத்தில் தான் ரஜினியுடன் நடக்க தொடங்கினார். பின்னர் சில காலங்களிலேயே ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடிக்க தொடங்கி விட்டார், கொடிபறக்குது, உழைப்பாளி, பாபா போன்ற படங்களில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து விட்டார்.

-விளம்பரம்-

ஸ்ரீ வித்யா :

தமிழ் நாட்டில் 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் கடந்த 2006ஆம் ஆண்டு மறைந்தார். இவர் கமல், ரஜினி என பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அபூர்வ ரகங்கள் படத்தில் ரஜினியுடன் நடிக்க தொடங்கினார், பின்னர் மனிதன் படத்தில் அக்காவாகவும், தளபதி படத்தில் அம்மவாகவும், மாப்பிள்ளை படத்தில் மாமியாராக நடித்து விட்டார்.

வடிவுக்கரசி :

1958ஆம் ஆண்டு பிறந்த இவர் ரஜினிக்கு “படிக்காதவன்” படத்தில் அண்ணியாக, “அருணாச்சலம்” படத்தில் ரஜினிக்கு பாட்டியாகவும், படையப்பா படத்தில் மாமியாராகவும் நடித்தார் பின்னர் சிவாஜி சூப்பர் ஹிட் படத்தில் அம்மாவாக நடித்து விட்டார்.

குளப்புள்ளி லீலா :

இவர் துணை கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார், எந்த வகையில் முத்து படத்தில் வரும் “இறுக்கி அனட்ச்சு உம்மா தருமோ” காட்சியில் அந்த பெண்ணுடைய சகோதரியாக நடித்திருப்பார், பின்னர் கடந்த வருடம் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினிக்கே அப்பத்தாக நடித்து விட்டார், ஆனால் அவர்க்கு ரஜினியை விட 4 வயது குறைவு.

சுமித்ரா :

1953ஆம் ஆண்டு பிறந்த சுமித்ரா புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் முக்கிய கதாபாத்தியதில் ரஜினியுடன் நடித்திருந்தார். இறைவன் கொடுத்த படத்தில் நடித்திருந்தார், பின்னர் பணக்காரன் படத்தில் ரஜினிக்கே அம்மாவாக நடித்து விட்டார்.

கமலா காமேஷ் :

கமலா காமேஷ் 1951ஆம் ஆண்டு பிறந்தார் இவர்க்கு தற்போது ரஜினியை விட ஒரு வயது குறைவு ஆனால் இவர் சிறுவயதிலேயே மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து விட்டார். அதிசய பிறவி படத்திலும் அப்பாவி ரஜினியுடைய அம்மாவாக நடித்திருப்பார்.

ஜெய பாரதி :

இந்த நடிகை 1954ஆம் ஆண்டு பிறந்தார், இவர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான “அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். பின்னர் முத்து படத்தில் அப்பா ரஜினிக்கு தங்கட்சியாகவும், மகன் ரஜினிக்கு முதலாளி அம்மாவாகவும் நடித்து விட்டார்.

எஸ். என் பார்வதி :

இவர் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் 4000திற்க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார், மேலும் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய 17வயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். பாமா விஜயா படத்தில் சாய்க்கர் ஜானகிக்கு அம்மாவாக நடித்திருப்பார். ரஜினியை விட சில வயதுகள் குருவாக இருக்கும் இவர் அப்போதே ராஜா சின்ன ஜோஜா, ஊர்காவலம், அதிசய பிறவி, அண்ணாமலை போன்ற படங்களில் அக்காவாகவும், அம்மாவாகவும் நடித்து விட்டார்.

ரேவதி சங்க்ர்:

இவருக்கு ரஜினிக்கும் சரி சமமான வயதுதான், இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தமிழ் சினிமாவில் கமலஹாசன் நடித்த காதலா காதலா படத்தில் அறிமுகமாக்கினார். பின்னர் பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவர் ரஜினிகாந்துடய சூப்பர் ஹிட் திரைப்படமான எந்திரன் பாடத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

Advertisement