ராகவேந்திரா படத்தால் ஏற்பட்ட நஷ்டம் – சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.

0
748
rajini
- Advertisement -

சம்பளம் வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த படம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குவித்து பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தை பெயர் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ரஜினி படம் குறித்த தகவல்:

இந்நிலையில் ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் நடித்த படம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினி நடித்த பல வெற்றி படங்கள் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக் தான். ரஜினி சூப்பர் ஸ்டாராக தக்கவைத்துக்கொண்டதில் அமிதாப் பச்சனின் இந்திப் படங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என்று முழுக்க கமர்ஷியல் பாணியில் ரஜினிகாந்த் படங்கள் பயணித்தது. பின் இவர் தன்னுடைய 100வது படம் ஆன்மீகமாகவும், ஸ்ரீ ராகவேந்திரா பற்றியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

-விளம்பரம்-

ரஜினியின் 100வது படம்:

ரஜினியை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்திய பாலச்சந்திரனின் கவிதாலயா இந்த படத்தை தயாரித்தது. ஸ்ரீ ராகவேந்திரராக ரஜினி நடித்து இருந்தார். இந்தப்படம் 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வெளியானது. ஆனால், ஸ்ரீ ராகவேந்திரா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆக்சன் ஹீரோவாக ரசித்து வந்த ரஜினியை சாதுவான ஆன்மீக கடவுளாக பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தயாரித்தது தன்னுடைய குரு என்பது ரஜினியின் கூடுதல் கவலையாக இருந்தது.

சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்:

இந்த படத்தின் நஷ்டத்தை சரிசெய்ய 1987இல் கவிதையாக ஒரு படம் ரஜினி நடித்தார். இந்த முறை எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு படத்தை தேர்வு செய்தார். அந்த படம் தான் வேலைக்காரன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்து இருந்தது. மேலும், ராகவேந்திரா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் வேலைக்காரன் படத்திற்கு எந்த சம்பளமும் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார் ரஜினி.

Advertisement