-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ராமர் கோவில் விவகாரம்: 30 ஆண்டுகளுக்கு முன் ரஜினி,கமல் சொன்னது என்ன? இன்றும் மாறாத கமல், பல்டி அடித்த ரஜினி.

0
493

தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்தனர்.மேலும், பொதுமக்கள் மட்டுமல்லாது ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தனர். இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மோடியின் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் கலந்துகொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி ‘ சிறப்பான முறையில் தரிசனம் நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் திறந்ததும் முதலில் பார்த்த 150 – 200 நபர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது ஆன்மிகம் சார்ந்த நிகழ்வு தான். ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. அது அவரவர்களின் சொந்த கருத்து. என் பார்வையில் இது ஆன்மிகம் சார்ந்ததே’ என்றும் கூறி இருந்தார். அதே போல கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கமலிடம் ராமர் கோவில் கட்டப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது ‘இதுகுறித்து 30 ஆண்டுக்கு முன்பே சொல்லி இருக்கிறேன் என்று கூறி இருந்தார்’. இதனை தொடர்ந்து அவரது பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் ரஜினி இயக்கத்தில் வள்ளி திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தின் ஒரு காட்சியில் இந்து நாட்டில் இந்து கோயில்கள் தான் இருக்க வேண்டும் என்பதாக காட்சியை வைத்துள்ளார் ரஜினி. பின்னர் அவரே ஞானியாக வசனம் பேசுகிறார். அதில், “அயோத்தியில் மட்டும் ராமர் கோயிலையும் மசூதியையும் கட்டி என்னய்யா பிரயோஜனம்.

முதலில் ஒவ்வொருவரின் இதயத்தில் ராமர் கோயில், மசூதி கட்டி இந்தியன் என்ற உணர்வுடன் வாழுங்கள்” என கூறுகிறார். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இயக்கிய படத்திலேயே இப்படி ஒரு வசனத்தை பேசிவிட்டு தற்போது அதற்கு முரணாக ரஜினி பேசி இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆனால். 30 ஆண்டுகள் கழித்தும் கமல் தனது நிலைபாட்டில் இருந்து மாறவில்லை.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news