கார்த்திக் சுப்புராஜ்- ரஜினி இணையும் படத்தின் “Title” வெளியிட்ட “Sun Pictures”..! செம கெத்தா இருக்கு.!

0
231
Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த “எந்திரன் 2.0 ” படத்திற்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கபோகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்படத்தின் இசையைமைபாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார், ரஜினி நடித்த 2.0 படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவைடந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த படத்தில் நடிகை சிம்ரன்,த்ரிஷா ஆகியோரும் கமிட் ஆகியுள்ளனர். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் இன்று (செப்டம்பர் 6) வெளியாகையுள்ளது.

இந்த தகவலை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் , சூப்பர் ஸ்டார் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இன்று மாலை 6 வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து ரஜினி ரசிகர்கள் குதுகுளத்தில் ஆழ்ந்துள்ளனர்