ரஜினியின் பேட்ட படத்தின் கதை இதுதான்..! இணையத்தில் கசியும் ரகசியம்.!

0
614
Petta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “2.0 ” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகி இருந்தார். இந்த படத்திற்கு “பேட்ட” என்று தலைப்பை வைத்துள்ளதாக இன்று சன் பிசர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

Rajini

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,த்ரிஷா, சிம்ரன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பகலில் கல்லூரி பேராசிரியராகவும் இரவில் ஹாஸ்டல் வார்டனாகவும் பணியாற்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த கல்லூரி இருக்கும் பகுதியில் சமூக விரோதிகள் செய்யும் அட்டகாசங்களையும் அவர்களையும் இரவு வேலைகளில் எதிர்த்து அவர்களை அடக்குகிறார் என்பது தான் கதையாம்.கிட்டத்தட்ட ரஜினி நடித்த “நான் சிகப்பு மனிதன் ” கதை போல தான் இருக்கிறது.

Petta - Copy

Petta-rajini - Copy

அதே போல இந்த படத்தின் மோஷன் போஸ்டறில் பார்க்கும் போது அதில் பேப்பர், பென், காம்பஸ் போன்ற கல்வி சார்ந்த உபகரண பொருட்கள் பறக்கின்றன. எனவே, இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தற்போது வெளியாகி இருக்கும் கதை உண்மையாக இருக்கலாம் எனவும் யூகிக்கபடுகிறது.