மும்பையில் இருந்து வந்த ரஜினி, வரிசியில் நின்று வாக்களித்த விஜய்.! வீடியோ இதோ.!

0
485
Rajini-Vijay

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18 ) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது.

அது போக நடிகர்களில் கமல், கார்த்தி மனசூர் அலிகான் பவர் ஸ்டார் என்று பல்வேறு பிரபலங்களும் இம்முறை தேர்தலில் இறங்கியுள்ளனர். இதனால் சினிமா துறையிலும் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல்களும் அந்தந்த தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர்களில் விஜய், ரஜினி, அஜித், கமல் ஆகியோர் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்த்தனர்.

தளபதி 63 படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வரிசையில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார். அதே போல மும்பையில் இருந்து வந்த ரஜினி ஸ்டெல்லா மேரிசில் த்னது வாக்கை அளித்தார்.

-விளம்பரம்-
Advertisement