புற்றுநோய் பாதிப்புக்கு ரஜினி உதவவில்லை – இத்தனை ஆண்டு ரஜினியிடம் வேலை பார்த்த நபர் போட்ட பதிவு.

0
425
sudha
- Advertisement -

தென்னிந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. ரஜினிகாந்ந் திரை வாழ்க்கையை தொடங்கியது முதலே தன்னுடைய கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வில்லன் நடிகரில் இருந்து இன்று இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தன்னை தெரியும் படி பிரபலமாகியுள்ளவர்தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், வசந்த ரவி, யோகிபாபு, விநாயகன் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படமானது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு திரையில் வெளியாகும் எனக்க தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

சினிமாவில் நடித்து வந்த 90ஸ் காலத்திலேயே அரசியலில் களமிறங்கிய ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களில் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ஒரு சார்பு ரசிகர்கள் இதற்கு பெரிய ஆதரவு தெரிவித்து பெரியளவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடைய ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார்கள். இப்படியிருக்கும் போதுதான் திடீரென ரஜினிகாந்த் தான் அரசியலில் களமிறங்க போவதில்லை என்று கூறியதால் இவரின் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ரஜினிகாந்த அவர்களிடம் நீண்டநாள் பணியாற்றி வந்த சுதாகர் என்பவர் மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு ரஜினிகாந்த் எந்த உதைவியும் செய்யவில்லை என்று சோசியல் மீடியாக்களிலும், செய்தி ஊடகங்களிலும் செய்தி பரவியிருந்தது. இதற்கு தற்போது ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுதாகர்.

அந்த பதிவில் சுதாகர் கூறியிருந்தது தலைவர் ரஜினிகாந்தின் அவரிவிதமான நன்மதிப்பைக் குளிப்பதற்காக இணையத்தில் ஒரு பொய் செய்தி உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

-விளம்பரம்-

எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன் எனறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இவர் போட்டிருக்கும் ட்வீடின் கமெண்டில் ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement