விஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..!2.0 உலகளவில் வசூல் சாதனை வேட்டை..!

0
368
2.0vssarkar

இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த திரைபடத்தின் மூலம் ரஜினிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.

2.0rajini

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம்.இதன் மூலம் இதுவரை தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரஜனி.

மேலும், சென்னையில் மட்டும் 2.0 திரைப்படம் 11 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. இத்தனை கோடி வசூல் செய்வது இது ரஜினியின் 4 வது படமாகும் ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் கபாலி காலா போன்ற படங்கள் சென்னையில் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

சென்னையில் 11 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதல் இடத்தில் இருந்தார். அவரது நடிப்பில் வெளியான தெறி,மெர்சல்,சர்கார் போன்ற படங்கள் இந்த சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த பட்டியலில் 4 படங்களுடன் முதல் இடத்தில இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.