தன் அப்பாவை பற்றி உளறி மாட்டிக்கொண்ட சௌந்தர்யா..! உடனே பேச்சை மாற்றி சமாளித்து எப்படி

0
979
Soundarya-Rajinikanth
- Advertisement -

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள ‘காலா ‘ படம் நாளை( ஜூன் 7) வெளியாகவுள்ளது. இந்த படமே இன்னும் வெளியாகாத நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் தகவலை பற்றி ரஜினியின் மகள் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ,பின்னர் சமாளித்துள்ளார்.

தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வரும் ரஜினி , ‘காலா’ படத்திற்கு பின்னர், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்த விடயம் தான்.

- Advertisement -

இந்நிலையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா, ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க போகும் படத்தில், அவருக்கு(ரஜினிக்கு) நிறைய ரோல் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தின் பதிவு ஒன்றில் உளறிவிட்டார். இதன் மூலம் ரசிகர்கள் அனைவரும் ரஜினி அந்த படத்தில் பல வேடங்களில் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

அந்த தகவல் வைரலாக பரவ, பின்னர் சுதாரித்துக் கொண்ட சௌந்தர்யா ‘நான் பல ரோல் என்று சொன்னது, அவரது (ரஜினி ) வாழ்க்கையில் தான், படத்தில் இல்லை. படத்தை பற்றி கார்த்திக் சுப்புராஜ் சரியான நேரத்தில் பேசுவார் ‘ என்று பூசி மொழுகி எப்படியோ சமாளித்து விட்டார்.

Advertisement