சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஒன்று, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவரான தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதுதான் அவரது முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதை விட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார் அதன் பின்னர் 8 ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை எடுத்து இருக்கிறார். விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கௌரவ புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Advertisement

படத்தில் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அவரது மகனாக விக்ராந்த், சம்சுதீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் இந்த படத்தில் திரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவருமே சிறுவயதில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலுக்கும் சிறுவயதில் இருந்தே பகை இருந்து வருகிறது அது கிரிக்கெட் மைதானமாக இருந்தாலும் சரி ஊரில் இருந்தாலும் சரி.மேலும் விஷ்ணு விஷாலின் கிராமத்தில் இந்துக்களும் விக்ராந்த் கிராமத்தில் முஸ்லிம்களும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி ஆரம்பித்த த்ரீ ஸ்டார் கிரிக்கெட் குழுவில் விக்ராந்த்தும் விஷ்ணு விஷாலும் இணைந்து விளையாடுகிறார்கள்.

Advertisement

ஆனால், விஷ்ணு விஷால் மீது இருக்கும் வன்மத்தால் அவரை அந்த அணியில் இருந்து நீக்கிறார்கள் இதனால் இந்துக்கள் ஒரு டீம் ஆகவும் முஸ்லிம்கள் நிறைந்த ஆட்கள் ஒரு டீமாகவும் கிரிக்கெட் அணியை உருவாக்குகிறார்கள். இப்படி இரண்டு ஊர்கள் இரு வேறு மதத்தினர் அடங்கிய கிரிக்கெட் அணிகள். அரசியல் ஆதாயத்திற்காக இவர்களுக்கு சண்டை மூட்டி ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மொய்தீன் பாய் எப்படி உள்ளே புகுந்து பஞ்சாயத்து செய்து இரு ஊர்களையும் ஒன்றிணைக்கிறார் என்பதே படத்தின் கதை.

Advertisement

இந்த படத்தின் போஸ்டர் வெளியான போதே இந்த படத்தில் ரஜினி கெட்டப் பெரும் கேலிக்கு உள்ளானது. தொப்பி வாப்பா பிரியாணி, வடிவேலு, ஓமக்குச்சி நரசிம்மன், லிவிங்ஸ்டன் என்று பலரது புகைப்படங்களை போட்டு கலாய்த்து வந்தனர்.இப்படி ஒரு நிலையில் படத்தில் ரஜினி அழும் ஒரு எமோஷனல் காட்சியை பகிர்ந்து பலரும் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே தர்பார் மட்டும் அண்ணாத்தா படங்களில் ரஜினி அழுத காட்சி கேலிக்கு உள்ளாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement