வீட்டு வேலைகாரரை ரஜினி நடத்திய விதம்..!பிறந்தநாளன்று சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம்..!

0
1487

நடிகர் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாள் இன்று.  `பேட்ட’ படத்தின் பாடல்கள் ஹிட் அடித்த குஷியில் இருக்கிறது படக்குழு. படத்தில் ரஜினியின் கெட் – அப் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. `பேட்ட’ படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.

இன்று காலை 11 மணிக்கு ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்டாக பர்த்டே டீசரை வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.மேலும், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் மனைவி லதா, சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின், மொபைல் போன் செயலியை வெளியிடுகிறார். 

- Advertisement -

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளத்தில் ரஜினிக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில் சமூக வலைதளத்தில் ரஜினி குடும்பத்தோடு படம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

ரஜினி, அவரது மனைவி லதா மற்றும் அவர்களது பேரன்களுடன் சேர்ந்து சமீபத்தில் பிரபல தியேட்டரில் 2.0 படம் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலானது. அதில், போயஸ் கார்டனில் அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் இருக்கை இருந்தும் ரஜினியின் இருக்கைக்கு பின்னால் நின்று கொண்டே படம் பார்த்துள்ளார். இந்த புகைப்படம் ரஜினியின் பிறந்தநாளான இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement