ரஜினி பூஜையறையில் திருமணம் “உடம்பை பாத்துக்கோங்க” என்ற ரஜினியின் குரல் – இறுதி அஞ்சலிக்காவது நேரில் செல்வாரா ரஜினி ?

0
340
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது .இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் ரஜினிக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த ரசிகர் ஒருவர் இறந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த தீவிரமான ரசிகர் ரஜினி முத்து என்றழைக்கப்பட்ட ஏபி முத்துமணி. தற்போது இவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மதுரை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று எல்லோருக்குமே முதன் முதலாக ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது மதுரையில் தான். அந்த அளவிற்கு அரசியல், கலை, இலக்கியம் என அனைத்து ரசனையும் கொண்ட இடமாக மதுரை திகழ்கிறது.

- Advertisement -

மதுரை பற்றிய தகவல்:

அதுமட்டுமில்லாமல் சென்னைக்கு முன்பே நாடக நடிகர் சங்கம் மதுரையில் தான் உருவாக்கப்பட்டது. தமிழ் வளர்த்த சங்கமே மதுரை தான். மேலும், மதுரை மக்களின் ரசனையை தெரிந்து கொண்டதால் தான் புதிதாக கட்சி தொடங்குவோர் மதுரையை தேர்வு செய்வார்கள். மாநாடு என்றாலும் அது மதுரையில் தான். ஒரு படம் சூப்பர் ஹிட் அடிக்குமா என்பதை கண்காணிப்பது மதுரையில் ரசிகர்களை வைத்து தான் என்று சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல் சினிமா உலகிற்கு நடிகர், நடிகைகள், வில்லன், காமெடி நடிகர்கள், துணை நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் என எல்லாருமே மதுரையில் இருந்து சென்றவர்கள்.

Image

ரஜினிக்கு ரசிகர் மன்றம் தொடங்கியவர்:

சொல்லப்போனால் அர்னால்டு, சில்வர் ஸ்டார், ஜாக்கி சான் ஆகியோருக்கு ரசிகர் மன்றத்தை வைத்ததும் மதுரையில் தான். அந்த வகையில் ரஜினிக்கு முதன் முதலாக ரசிகர் மன்றத்தை மதுரையில் தொடங்கியவர் ஏபி முத்துமணி. இவர் தன்னுடைய 18 வயதில் கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தொடங்கினார். தனக்கு முதல் ரசிகர் மன்றம் வைத்தவர் என்பதால் ரஜினிக்கு மிகவும் பிடித்தவரும் நெருக்கமான ஒருவர் முத்து. அப்போதெல்லாம் இவர் நேரடியாக ரஜினி வீட்டுக்குள் எந்த ஒரு தடையில்லாமல் செல்வாராம்.

-விளம்பரம்-

ரஜினி ரசிகர் முத்து காலமானார்:

அதுமட்டுமில்லாமல் சிறுவயதிலேயே முத்து பெற்றோரை இழந்து விட்டதால் இவரின் திருமணத்தை ரஜினிகாந்த் வீட்டிலேயே பூஜை அறை முன்பு செய்து வைத்தாராம். தாலி உட்பட சீர்வரிசை பொருட்கள் அனைத்துமே ரஜினி கொடுத்து இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தாராம். அந்த அளவிற்கு ரஜினியுடன் நெருக்கமானவராக இருந்தவர் முத்து. பின் காலம் செல்ல செல்ல ரசிகர் மன்றமும் அதிகமாக மாறியது. கடந்த 2020இல் கொரோனா பாதிப்பு வேகமாக பரவிய போது முத்தும் மணியும் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

கோகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள்:

இந்த தகவல் ரஜினிக்குத் தெரிந்த உடனேயே முத்து மணிக்கு போனில் உரையாடி, உடம்பை பார்த்துக்கொள். சீக்கிரம் நலமாகிவிடுவாய் என்று ஆறுதல் சொல்லி இருந்தார். ரஜினி சொன்ன ஆறுதல் முத்துமணிக்கு உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் தான் சமீபத்தில் மீண்டும் உடல் நலம் குன்றி முத்துமணி சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி முத்து இன்று திடீரென்று மரணம் அடைந்தார். இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மதுரை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் முத்து மணி சுடரே வா, முத்து பட டைட்டில் என எல்லாம் இவருக்காக தான் ரஜினி வைத்தார் என்று கூறப்படுகிறது.

Advertisement