சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை திரையரங்கிற்கு வெளியில் விமர்சனம் செய்த இந்த நபரின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இவரது இந்த வீடியோவை பார்த்து நிச்சயம் இவர் சினிமா சம்மந்தப்பட்ட நபராக தான் இருப்பார் என்று ரசிகர்கள் பலர் கூறி வந்தனர். அது உண்மை தான். பொதுவாகவே, சினிமா உலகில் பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையாததால் அவர்கள் எங்கு போனார்கள்? என்றே தெரியாத அளவிற்கு சென்று விடுகிறார்கள். அந்த வகையில் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பல நடிகர்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி சரியான வாய்ப்பு அமையாததால் பின்னோக்கி சென்ற நடிகர் சத்யேந்திரா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர் ரஜினி, ரகுவரன் என்று பல முன்னணி நடிகர்கள் உடன் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு ரஜினி, ரகுவரன் உட்பட பல நடிகர்கள் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆவார்.

Advertisement

சமீபத்தில் நடிகர் சையந்திரா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் ரஜினி, ரகுவரன் குறித்து கூறியிருந்தது. ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். அவர் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்று தான் நான் சொல்லுவேன். அவரை நான் முதலில் சந்திக்கும் போது பெரிய நடிகர் எல்லாம் கிடையாது. ஒரு படத்தில் தான் அவர் நடித்து இருந்தார். அவர் என்னை பார்த்து மரியாதையாகத்தான் நடத்தினார்.

பின் அவர், நீங்கள் மெட்ராஸ் வாங்க பார்த்துக்கலாம் என்று சொன்னார். அப்போது எனக்கு மெட்ராஸ் போவது என்பது அமெரிக்கா செல்வது மாதிரி பெரிய விஷயம். பணக்கஷ்டம் இருந்தது. ஒரு பத்து நாள் அவருடன் டிராவல் செய்தேன். அவர் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்பது அவருடைய குணம் தான் காரணம். அதேபோல் மீண்டும் சென்னையில் அவரை ஒரு ஓட்டலில் சந்தித்தேன்.உடனே அவர் என்னை நன்றாக நியாபகம் வைத்து பேசினார். வீட்டுக்கு வாங்க என்று அழைத்தார்.

Advertisement

பொதுவாகவே பிரபல நடிகர்கள் வீட்டிற்கு அழைக்கும் போது கேட்டில் வாட்ச்மேனும், மேனேஜரும் விடமாட்டார்கள். அந்த பிரச்சனை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தேபோல் ரகுவருடன் முதல் படத்தில் நான் நடித்திருந்தேன். நான் நிறைய கம்பெனிகளுக்கு சென்று வாய்ப்பு கேட்டிருப்பேன். அப்போது நிறைய பேர் பழக்கம். அதன் மூலம் ஒருவர் ராபர்ட் மாதிரி ஒரு நல்ல ஆள் வேண்டும் என்று சொன்னார்.

Advertisement

அப்போது நான் ரகுவிடம் சொன்னேன். அவரிடம் இந்த கம்பெனி என்று தான் சொன்னேன். வாய்ப்பு நான் வாங்கித் தரவில்லை. பின் ரகுவரனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எங்கு பார்த்தாலும் அன்பாகவும், மரியாதையாகவும் தான் பேசுவார். அவர் இழப்பு கஷ்டமாகத்தான் இருந்தது. அவர் நிறைய குடிப்பார். அவரை சுற்றி ஒரு பெண் கூட்டமே இருக்கும். அந்த அளவிற்கு அழகானவர் என்று பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

Advertisement