தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு உடல் நலக்குறை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமாகி இருக்கிறார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சரத்பாபு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவருக்கு சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் தான் இவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது. இதனை இவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் மருத்துவனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 71. சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். சரத் பாபுவுடன் ‘ அண்ணாமலை, முள்ளும் மலரும், வேலைக்காரன்,முத்து,பாபா என்று பல படங்களில் ரஜினி நடித்து இருந்தார்.
அதிலும் இவர்கள் இருவர் காம்பிநேஷனில் வந்த முத்து, அண்ணாமலை படங்கள் இன்றளவும் ஒரு மாஸ்டர் பீஸ் தான். சரத் பாபுவுடன் பல படங்களில் நடித்த ரஜினி அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று சோகமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சரத்பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி ”ரத்பாபு எப்போது சிரித்த முகத்துடனே இருப்பார். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மெகாஹிட் ஆகின. ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் சிகரெட் பிடிப்பதை பார்த்தால் உடனே சிகரெட்டை பிடிங்கி கீழே போட்டு அணைத்துவிடுவார். அந்த அளவுக்கு என்மீது அன்பு வைத்திருந்தார்.
என்னை ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு, இப்போ அவர் சீக்கிரமாவே போனது வருத்தமா இருக்கு’ என்று கூறியுள்ளார். சரத்பாபுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்காக ரஜினி காரை விட்டு இறங்கியபோது அங்கிருந்து நபர் ஒருவர் ரஜினிக்கு குடை பிடித்தார். ஆரம்பத்தில் இதை கவனிக்காத ரஜினி பின்னர் தனக்கு குடை பிடித்து இருக்கும் அந்த நபரைக் கண்டு உடனே எதற்கு இதெல்லாம், எதுக்குப்பா குடை பிடிக்கிற போ போ என்று தன்னடக்கத்துடன் கூறிவிட்டார். ரஜினியின் எந்த செயலைக் கண்டு நிகழ்ந்துபோன ரசிகர்கள் பலரும் என்றும் தன்னிலை மாறாத தலைவன் என்று பாராட்டி வருகிறார்கள்.