ஹாலிவுட் படப்பிடிப்பில் சிகரெட் பிடித்துகொண்டே பேட்டி கொடுத்த ரஜினி. இந்த வீடீயோவை பார்த்திருக்கீங்களா ?

0
30316
rajini
- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்துடன் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். காலங்கள் பல கடந்தாலும் தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் கோடிக்கணக்கான மக்களை தன்பக்கம் கட்டிப்போட்டவர். இவர் தமிழ் சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்கு முன் சிகரெட் பிடித்து கொண்டே கொடுத்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் ஆங்கிலம் பேச சிரமப்பட்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், அவர் ஒரு ஆங்கில படத்தில் நடித்திருப்பது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ரஜினிகாந்த் அவர்கள் 1998 ஆம் ஆண்டு பிளட் ஸ்டோன் என்ற ஆங்கில படமொன்றில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தை நிக்கோ மாஸ்ட்ரோகிஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் டாக்ஸி டிரைவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் இந்த படத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இன்டர்வியூ கொடுத்திருப்பார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் தலைவா!! என்ன இது? என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement