கூகுள் போட்டோஸ்ஸில் இருந்து சுடப்பட்டுள்ள ‘ஜெயிலர்’ பர்ஸ்ட் லுக் – ப்ளூ சட்டை பகிர்ந்த புகைப்படம் (அட, உண்மை தான்பா)

0
766
bluesattai
- Advertisement -

ரஜினியின் ஜெயிலர் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குவித்து பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் பாருங்க : உடன் நடித்த நடிகரை ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட அவன் இவன் பட நடிகை. வெளியான புகைப்படம்.

- Advertisement -

நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணி:

சமீபத்தில் நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன், ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

தலைவர் 169 படம்:

இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த் உட்பட நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்திற்கு நெல்சனுக்கு திரைக்கதை எழுத உதவி செய்வதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

படத்தின் பெயர் போஸ்டர்:

ஆனால், அவர் இந்த படத்தில் நடிக்க மட்டும் செய்கிறார் என்ற உறுதியான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான போஸ்டர் தான் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் டீவ்ட்:

அதில் அவர், சமீபகாலமாகவே படங்களில் வயலெண்ஸ், ரத்தம், சிகரெட், டிரக்ஸ், தொங்கவிடப்பட்ட கத்தியில் ரத்தம் என்று கொடூரமாக காண்பித்து வருகிறார்கள். இது எல்லாம் 2K இளைஞர்களை தவறான வழிக்கு உருவாக்குவது போல செய்கிறார்கள். இதே மாதிரி இன்னும் நூறு போஸ்டர்கள் இருக்கிறது. இது நல்ல சமுதாயத்திற்கான வழிகாட்டுதல் அல்ல என்று ரஜினியின் படத்தை விமர்சித்து ப்ளூ சட்டை டீவ்ட் போட்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருக்கும் background கூகுள் போட்டோஸ்ஸில் இருந்து சுடப்பட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு பலர் கேலி செய்து வரும் நிலையில் அந்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement