உடன் நடித்த நடிகரை ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட அவன் இவன் பட நடிகை. வெளியான புகைப்படம்.

0
614
madhu
- Advertisement -

ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை மது ஷாலினியின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் மதுஷாலினி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். கடந்த 2015ஆம் ஆண்டு மிஸ் ஆந்திரா பட்டத்தை வென்றிருந்தார். அதற்கு பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

-விளம்பரம்-

இதனையடுத்து சிரஞ்சீவியின் அண்டரிவாடு என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் மது ஷாலினி. ஆனால், இந்த படத்தில் இவர் துணை நடிகையாக நடித்து இருந்தார். பிறகு 2006 இல் அல்லேறி நரேஷுடன் “கீதகிதாளு” என்ற படத்தில் மது ஷாலினி ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் வரிசையாக பல தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : இம்மாதம் வெளியாக இருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக், யார் நடிச்சி இருக்காங்க பாருங்க ? (பிகினி ட்ரெஸ்ல நடிக்கமா இருந்தா சரி)

- Advertisement -

மது ஷாலினி திரைப்பயணம்:

பின் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பழனியப்பா கல்லூரி என்ற படம் மூலம் தான் இவர் தமிழில் என்றி ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் மிர்ச்சி சிவா நடிப்பில் 2011 ஆண்டு தமிழில் வெளியான படத்தில் நடித்து இருந்தார். மேலும், இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது. அந்த படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மது ஷாலினி- கமல் நடித்த படம்:

இந்த படத்தின் வெற்றிக்குப் பின் இவர் கமலுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அதன்படி ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த தூங்கா வனம் என்ற படத்தில் மது சாலினி நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடிகர் கமலஹாசன் உடன் லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பஞ்சராக்ஷரம் என்ற படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

மது ஷாலினி நடித்த படங்கள்:

கடைசியாக இவர் ஆர்கே சுரேஷ் நடித்த விசித்திரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சிபிராஜ் நடித்துள்ள ரேஞ்சர் என்ற படத்திலும் மது ஷாலினி நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்து இருந்த மது சாலினி ரகசியமாக திருமணம் செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது இவர் தன்னுடன் பஞ்சராக்ஷரம் படத்தில் நடித்த கோகுல் ஆனந்த் என்கிற நடிகரை காதலித்து இருந்தார்.

மது ஷாலினி திருமண புகைப்படம்:

பின் இவர்கள் இருவரும் குடும்பத்தினர் மற்றும் பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. அதோடு இவர்கள் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். தற்போது இவர்களுடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement