காலா படத்திற்கு தடையா..? தொடங்கியது ஆட்டம்..! படம் ரிலீஸ் ஆகுமா..? கவலையில் படக்குழு

0
636
kaala Ranjith

இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக இணையும் “காலா”படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த சந்தோசத்தை அனுபிக்கும் முன்பாகவே காலா படக்குழு ஒரு புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது.

kaala

ஒரு படம் எந்த அளவிற்கு பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது அந்த அளவிற்கு அந்த படம் சில பிரச்சனைகளை சந்திக்கும் என்பதர்க்கு மற்றும் ஒரு உதாரணம் தான் “காலா” அதுவும் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வேறு விமர்சங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் “காலா” படத்தில் ரஜினியின் பெயரான கரிகாலன் என்ற பெயரை நீக்குமாறு சென்னை, போரூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பற்றி அவர் தரப்பில் தெரிவிக்கையில் காலா படத்தின் கதையும் இந்த படத்தின் தலைப்பும் தன்னுடையது என்றும், இந்த கதையை பற்றி நடிகர் ரஜினியிடமும் தான் ஏற்கனவே கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

kaala movie

மேலும், இந்த படத்தின் தலைப்பை நான் 1996 ஆம் ஆண்டே கரிகாலன் என்ற பெயரில் பதிவு செய்துவிட்டதாகவும் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இதனால் “காலா” படத்தில் இருந்து “கரிகாலன்” என்ற பெயரை நீக்குமாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கிற்கு வரும் ஜூன் 14 ஆம் தேதிக்குள் ரஜினி ,ரஞ்சித், தனுஷ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.