300 பேர் வராங்க நீங்க வரமீட்டிங்களா – மணிரத்னம் சொன்ன வார்த்தை, தளபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டியுள்ள ரஜினி. ஷோபா பகிர்ந்த சுவாரசிய தகவல்.

0
711
thalapathy
- Advertisement -

தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை நடிகை சோபனா பகிர்ந்திருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலுக்கு கேட்ப ரஜினியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து பண்ணுகிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

- Advertisement -

ரஜினி நடிக்கும் புது படம்:

மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். அந்த வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிரூத் மூவரும் செம்ம மாஸாக இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படங்களில் ஒன்று தளபதி.

தளபதி படம் பற்றிய தகவல்:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் தளபதி. இந்த படத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, சோபனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தளபதி படத்தில் நடித்த சோபனா அவர்கள் ரஜினிகாந்த் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ரஜினி அவர்கள் மிகப்பெரிய நடிகர்.

-விளம்பரம்-

ரஜினி குறித்து மணிரத்தினம் சொன்னது:

அப்போது அவர் ஒரு சூப்பர்மேன் போல் மிகப் பிரபலமான நடிகர். இப்போதும் அவர் அதே இடத்தில் தான் இருக்கிறார். தளபதி படத்தின் போது அதிகாலை காட்சி அதிகமாக இருக்கும். இந்த அதிகாலை ஷூட் விஷயத்தில் மணிரத்தினம் மிகவும் கவனம் செலுத்தினார். அதனால் ரஜினி சாரையும் அதிகாலை படப்பிடிப்பு வர சொன்னார். அப்போது ரஜினி சார் அதிகாலை படப்பிடிப்பிற்கு வரமாட்டார் என்று பிறர் சொன்னார்கள். பின் ஏன் சார் கஷ்டப்படுகிறீர்கள் என்று கூறியதற்கு, 300 பேர் வரலாம் என்றால் 301 ஆல் வரலாம் என்று மணி சார் சொன்னார். ஆனால், எங்களுக்கு ரஜினி சார் வருவதில் நம்பிக்கை இல்லை. நாங்கள் அடுத்த நாள் அதிகாலை 3 முதல் 4 மணி அளவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம்.

தளபதி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி:

அப்போது எங்களை ஒரு மலையில் ஏற வேண்டும் என்று சொன்னார்கள். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் எங்க ஒரு யூனிட் பணியாளர்கள் மட்டும் ஏறிக் கொண்டிருந்தனர். மலையின் உச்சியில் சிகரெட்டின் ஒரு சிறிய வெளிச்சம் இருந்தது. அங்கே ஒருவர் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். அவர் தான் முதலில் வந்தவர். நாங்கள் எல்லாம் யார் என்று சென்று பார்த்தால் அவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான். பின் அவர், எல்லோரும் நான் சரியாக வரமாட்டேன் என்று நினைத்தீர்களா? நான் இங்கு இருக்கிறேன். எனக்கு மேக்கப் தேவை இல்லை. படப்பிடிப்பை தொடங்குங்கள் என்று கூறினார். அவர் எங்களுக்கு முன்பாகவே சீக்கிரம் எழுந்து தயாராகி மலை உச்சியில் இருந்தார். எங்கள் எல்லோருக்குமே மிக சர்ப்ரைசாக இருந்தது. இப்படி பல தருணங்கள் தளபதி படம் எடுக்கும் போது நடந்தது என்று பகிர்ந்திருக்கிறார். இப்படி சோபனா பகிர்ந்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement