குழந்தை பிறந்தும் நாயகியாக கலக்கிய நடிகை ரதி என்ன ஆனார் ? இப்போ எப்படி இருக்கார், அவரின் மகன் இந்த நடிகர் தான்

0
1400
rathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த எத்தனையோ நடிகைகள் என்ன ஆனார்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில் 80ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரதியை அவ்வளவு எளிதில் 80ஸ் ரசிகர்கள் மறந்து இருக்கமாட்டார்கள். இளம் வயதில் சினிமாவில் நுழைந்த சினிமா நடிகைகள் மிகவும் சொற்பமே. அந்த வரிசையில் தனது 16 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாணவர் நடிகை ரதி. 1960 ஆம் ஆண்டு உத்ரபிரதேசத்தில் பிறந்தார்.

-விளம்பரம்-

மேலும், தனது 10 வயதிலேயே மாடலிங்கில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள “காட் ஷெப்பர்டு கான்வென்ட்” என்ற பள்ளியில் படித்த இவர், தனது பள்ளியில் நடந்த அணைத்து பள்ளி நாடகங்களிலும் நடித்துள்ளார்.பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் இருந்த இவருக்கும் முதல் படத்திலேயே பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

- Advertisement -

குவிந்த படவாய்ப்புகள் :

அந்த படம் நல்ல வரவேற்பை பெற இவருக்கு அடுத்த படத்திலேயே ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாரதி ராஜா படத்தை தொடர்ந்து சுதாகர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான நிறம் மாறாத பூக்கள் படத்தில் நடித்து இருந்தார். 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ராதாவின் தங்கை என்று பலரும் கருதினர் . இருப்பினும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி , கமல் ,விஜயகாந்த் ,என்று பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

rati-agnihotri

கழுகு படத்திற்கு பின் :

மேலும், இந்தி, தெலுகு, கன்னடம் என்று பிற மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஒரு கட்டத்தில் இந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்ததால் தமிழ் படங்களை ஓத்துவிட்டார். பின்னர் இந்தியிலும் ஒரு ரவுண்டு வந்தார். கழுகு திரைப்படதிற்கு பின்னர் இவர் நாயகியாக எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால், இந்தியில் அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

இறுதியாக நடித்த பிரசாந்த் படம் :

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் , இவர் இதுவரை தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என மொத்தம் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1980 களில் தனது சினிமா பயணத்தை தொடங்கினாலும் 2016 ஆம் ஆண்டுடன் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதே போல தமிழில் இறுதியாக பிரசாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு படத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழிலும் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

ரதியின் குடும்ப வாழ்க்கை :

இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு அணில் விர்வானி என்ற பிஸ்நெஸ் மேனை திருமணம் செய்துகொண்டார். அதாவது சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த காலத்திலேயே திருமணம் செய்துகொண்டார். திருமணமான அடுத்த ஆண்டே இருக்கு ஒரு மகனும் பிறந்தார். அதன் பின்னரும் இவர் நடித்து வந்தார். மேலும், 2015 ஆம் கணவரை விவாகரத்து செய்தார். இவரது மகன் தற்போது தொலைக்காட்சி நடிகராக இருந்து வருகிறார்.

Advertisement