காவிரி பிரச்சனைக்காக தோனியிடம் ரஜினி வைத்த கோரிக்கை என்ன தெரியுமா ?

0
1364
Dhoni rajin
- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் கருப்புநிற பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்று தமிழ்த்திரையுலகின் சூப்பர்ஸ்டார் கோரிக்கை வைத்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள போராட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றது.

-விளம்பரம்-

kavery

- Advertisement -

இதில் முன்னனி நடிகர்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன்,கமல் மற்றும் ரஜினி ஆகிய நடிகர்கள் கலந்துகொண்டனர்.இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி “காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தும் விதமாக இந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் அனைவரையும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடிட வேண்டும்என கூறியுள்ளார்.

மேலும் பலகோடி ரூபாய் வருமானம் கிடைத்தாலும் கூட மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு தேவையில்லை. நம் மண்ணையும்,காற்றையும், நிலத்தையும் மாசுபட விடக்கூடாது என்று தெரிவித்தார்.

-விளம்பரம்-

மேலும் பேசிய ரஜினி “கமல் அரசியலில் என்னுடைய எதிரி இல்லை. ஏழைகளின் கண்ணீரும், வறுமையும் தான் அரசியலில் எனக்கு எதிரி” என்றார்.

Advertisement