தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோளொன்றி நின்று வந்த இயக்குனர் மகேந்திரன் இன்று (ஏப்ரில் 2) உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் பத்திரிகையாளராக இருந்த இவரை சினிமா துறைக்கு கொண்டு வந்தவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் தான். 1996 ஆம் ஆண்டு ‘நாம் மூவர்’ என்ற படத்தில் கதை ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்க : அஜித்தை வைத்து இப்படி ஒரு கதையை இயக்க ஆசைப்பட்ட மகேந்திரன்.! என்ன கதை தெரியுமா.

Advertisement

அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து ‘முள்ளும் மலரும்’ மலரும் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு ரஜினிக்கும் அந்த படம் மாபெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்திருந்தது.

கடந்த சில காலமாக சிறு நீராக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். தற்போது அவரது வீட்டிலேயே இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். மகேந்திரனின் உடலுக்கு நடிகர்கள் ரஜினி, தலைவாசல் விஜய், மணிரத்னம், பாக்கியராஜ் போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தினர்.

Advertisement
Advertisement