‘நான் நாச்சிக்குப்பம்’ தமிழன் என்று தர்பாரில் ரிஜிஸ்டர் செய்த ரஜினி. சீமானுக்கு பதிலடியா ? வீடியோ இதோ.

0
26990
darbar
- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். சூப்பர் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is rajini-1024x807.jpg

தர்பார் படம் வெளியாகி தியேட்டர்களில் சும்மா தெறிக்க விட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்று பலரும் கூறுவார்கள். ஆனால், இவர் உண்மையிலேயே தமிழகத்தை சேர்ந்தவர். தர்பார் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி அவர்கள் டெல்லியிலிருந்து மும்பை கமிஷனராக டிரான்ஸ்பர் ஆகி விமான நிலையத்தில் இருந்து இறங்கி வருவார். அவரை வரவேற்க காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவார்கள். அப்போது காவல்துறை அதிகாரிகள் நாங்கள் 2 பேருமே தமிழ் தான் சார் என்று அறிமுகப் படுத்திக் கொள்வார்கள். அதில் ஒருவர் நான் கள்ளக்குறிச்சி என்று அறிமுகம் செய்து கொள்கிறார். மற்றொருவர் என்னுடைய சொந்த ஊர் சென்னை என்று கூறுவார்.

இதையும் பாருங்க : படப்பிடிப்பு தளத்தில் மஞ்சு வாரியருக்கு ஏற்பட்ட விபத்தால் ரத்தான நிகழ்ச்சி.

- Advertisement -

ரஜினிகாந்த் அவர்களும் நான் நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரி டிஸ்ட்ரிக்ட் என்று கூறுவார். இந்த டயலாக் வெறும் படத்திற்காக சொல்லப்பட்டது கிடையாது. ரஜினியின் சொந்த ஊர் நாச்சிக்குப்பம் ஆகும். ரஜினிகாந்த் அவர்கள் கர்நாடகத்தில் பிறந்தாலும் அவரது தந்தையின் சொந்த ஊர் நாச்சிக்குப்பம். அவரது அப்பா ராமோஜி ராவ் கெய்க்வாட்டாவிலிருந்து கர்நாடக மாநிலத்தில் குடியேறினார். ஆனாலும், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக கர்நாடக மாநில எல்லையிலுள்ள நாச்சிக்குப்பத்திற்கு ரஜினிகாந்தின் குடும்பம் வந்து செல்கிறது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ரஜினிகாந்த் உறவினர்கள் வசித்து வருகின்றார்கள்.

மேலும், ரஜினி சிறுவனாக இருக்கும் போது இருந்தே நாச்சி குப்பத்தில் உள்ள சொந்தக்காரர் வீடுகளுக்கு அப்பப்போ வந்து செல்வது வழக்கமாக வைத்து உள்ளார். சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் ரஜினி வேறு மாநிலத்தை சேர்ந்தவர். ஒரு தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என பல்வேறு விமர்சனங்களை எழுப்பினார்கள். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக பயங்கர பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் படத்தில் ரஜினியின் வசனம் மூலம் “நானும் தமிழன்டா” என்பதை உணர்த்தும் வகையில் இந்த காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. ரஜினி அவர்கள் இதுவரை தனது படங்களில் தன்னுடைய சொந்த ஊரைப் பற்றி பேசியது கிடையாது. இந்த படத்தில் அவரது ஊர் குறித்து பேசியது அவர் அரசியலுக்கு வருவதற்கு ஒரு அட்சாரம் போடுவது போல் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement