25 போலீசுடன் ரஜினிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு…! அரசு அதிரடி..! வெளிவந்த காரணம் .!

0
240
Actor-rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் “2.0” படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது “பேட்ட ” படத்தின் படப்பிடிப்பில் பங்குபெற்று இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த.

rajini-petta

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் உத்தர பிரதேச மாநிலம் லக்நோவில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலத்திற்கு இந்த படத்தின் படப்பிடிப்புகள் லக்னோவில் தான் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினியின் பாதுகாப்பிற்காக உத்தர பிரதேச அரசு 25 காவலர்களையும் அனுப்பி வைத்துள்ளது.

தற்போது முதற்கட்ட படப்பிடிப்புகள் வாரணாசியில் படு மும்மரமாக நடந்து வரும் நிலையில் ரஜினியின் பாதுகாப்பிற்காகவும், ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் நியமிக்கபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

petta

சன் பிசர்ஸ் தயாரித்து வரும் “பேட்ட” படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிக்கு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.