பணிப்பெண்ணை நிற்க வைத்து

0
484

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் கொண்டாடத்தற்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு சமூக வலைதளத்தில் ரஜினி குடும்பத்தோடு படம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

ரஜினி, அவரது மனைவி லதா மற்றும் அவர்களது பேரன்களுடன் சேர்ந்து சமீபத்தில் பிரபல தியேட்டரில் 2.0 படம் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலானது. அதில், போயஸ் கார்டனில் அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் இருக்கை இருந்தும் ரஜினியின் இருக்கைக்கு பின்னால் நின்று கொண்டே படம் பார்த்துள்ளார்.

அந்த புகைப்படம் ரஜினியின் பிறந்தநாளான இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பிபியது. ஆனால், உண்மையில் ரஜினிகாந்த் வீட்டின் பணிப்பெண் அமர்ந்து தான் படத்தை பார்த்துள்ளார். 

அந்த புகைப்படம் படத்தின் இடைவேளையில் எடுக்கப்பட்டதாம். அப்போது அவரும் அருகில் நின்றதால் இப்படி ஒரு வதந்தி பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீங்கள் நன்றாக கவனித்தால் அனைவரும் படம் பார்க்கும் போது போட்டுக்கொள்ளும் 3d கண்ணாடியை கையில் வைத்திருப்பார்கள். எனவே, அந்த புகைப்படம் இடைவெளியின் போது எடுக்கப்பட்டது தான் என்பது உறுதியாகியுள்ளது.