‘சீனியர்கள் வேண்டாம்’ இளம் இயக்குனருடன் இணையும் ரஜினி – (படத்தை பார்த்துவிட்டு ஹாஹா ஓஹோனு பாராட்னாரே)

0
1068
rajini
- Advertisement -

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருந்த நிலையில் படப்பிடிப்புக் குழுவில் சிலருக்கும் கொரோனா ஏற்பட்டதால் ரஜினிகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது . இபப்டி ஒரு நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுபவிக்கப்பட்டார். மருத்துவ மனையில் இருந்து திரும்பிய ரஜினி தனது அரசியல் முடிவை அறிவித்தார்.

-விளம்பரம்-

 ரஜினியின் திடீர் உடல்நலக்குறைவால் பாதியில் நிறத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது உடல் நலம் தேறியுள்ள ரஜினி, படப்பிடிப்புகளை தொடர ஒப்புதல் அளித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் துவங்கியது. இப்படி ஒரு நிலையில் அண்ணாத்த’ படம் நிச்சயம் என்னுடைய கடைசி சினிமாவாக இருக்கக்கூடாது. நான் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன். என் வயதுக்கேற்றவகையிலான கதாபாத்திரங்களில் நிச்சயம் தொடர்ந்து நடிப்பேன் என்று கண் கலங்கி கூறி இருக்கிறாராம்.

இதையும் பாருங்க : திருமணமே ஆகல அப்புறம் இது எப்படி ? ரசிகர்களின் குழப்பத்தை தீர்த்து வைத்த லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை

- Advertisement -

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி, சீனியர் இயக்குனர்களை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டுகிறாராம். இப்படி ஒரு நிலையில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த தேசிங்கு பெரியசாமிக்கு ரஜினி ஓகே சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு மிகவும் இம்ப்ரெஸ் ஆகி, இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். சூப்பர்ர்ர், அற்புதம் , ஹாஹாஹா, உண்மையில் நான் பழைய. காலத்துக்குப் போய்விட்டேன்.

வாழ்த்துகள். பெரிய எதிர்காலம் உங்களுக்கு மேலும், எனக்கும் ஒரு கதை பண்ணுங்க என்று கூறி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, ரஜினிக்கு தன்னிடம் கதை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறினார் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிக்காக அவர் ஒரு கதையை பல வருடங்களாக வைத்துள்ளார். சிரஞ்சீவி அந்தக் கதையை தனக்கு தரும்படி கேட்டதாகவும், ரஜினிக்காக அந்தக் கதையை வைத்திருப்பதாக கே.எஸ்.ரவிக்குமார் மறுத்ததாகவும் திரையுலகில் ஒரு செய்தி உண்டு. ஆனால், அவருக்கு ரஜினி வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement