அன்றும் இன்றும் என்றும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வரும் படத்தை பார்ப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவருடைய படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகை லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்களும் இருக்கின்றனர் என்பது பலரும் அறிந்த ஒன்று.

ரஜினி வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் அதற்கு அவர் மனைவி லதாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பட சூட்டிங்கில் கல்லூரி பத்திரிகையாக ரஜினியை பேட்டி எடுக்க லதா வந்தார். அப்போது தான் முதன்முதலாக இருவரும் சந்தித்தார்கள்.

Advertisement

ரஜினி முதல் சந்திப்பிலேயே லதாவிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டுள்ளார். அதற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டு கல்யாணம் வரை சென்றது. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு லதா அவர்கள் தன்னுடைய குடும்பத்தையும், கணவரையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதே தன் கடமையாகக் கருதினார்.

பின் தன்னுடைய எல்லா வேலையையும் விட்டுவிட்டு குடும்பத்தை கவனித்து வந்தார். லதா அவர்கள் பாடகி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ‘கடுவுள் உள்ளமே’ என்ற பாடலை பாடி இருக்கிறார் லதா. மேலும், ரஜினி எழுதி, தயாரித்து ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த வள்ளி திரைப்படத்தில்  என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடலை பாடி இருந்தார்.

Advertisement

ரஜினி படத்திற்கு மட்டுமல்லாது கமல் நடித்த டிக் டிக் டிக் படத்தில், நேற்று இந்த நேரம் என்ற பாடலை பாடியது லதா தான். வள்ளி படத்திற்கு பின்னர் லதா எந்த படத்திலும் பாடவில்லை. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தில் ‘காதல் கனவா’ என்ற பாடலை பாடி இருந்தார் லதா. அதன் பின்னர் எந்த படத்திலும் அவர் பாடவில்லை.

Advertisement

அதே போல ரஜினிகாந்தின் 51வது பிறந்தநாளை லதா ரஜினிகாந்த் ரொம்பவும் கோலாகலமாக கொண்டாடினார். டிசம்பர் மாதம் முழுக்க அபிராமி மெகா மாலில் மிகப்பெரிய கண்காட்சி மற்றும் ரஜினியின் படங்கள் திரையிடப்பட்டன. டிசம்பர் 23ஆம் தேதி 25 வருட ரஜினியின் சினிமா என்ற பெயரில் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டது. இதில் திரையுலகின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டார்கள். லதா ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் 5 ஆல்பம் பாடல்களை பாடி வெளியிட்டிருந்தார்.

Advertisement