5ஆம் வகுப்புலே ரஜினியின் தீவிர ரசிகன், அட, இவர் படத்த பாத்துட்டு ரஜினி போன் பண்ணி பாராட்டினாரே. இந்த சிறுவன் யார் தெரியுமா ?

0
960
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருடைய படம் திரையரங்குகளில் வெளிவரப் போகிறது என்றாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். மேலும், இவருடைய படம் எல்லாமே கோடியில் வசூலை வாரி குவித்து இருக்கிறது. அந்த வகையில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாட்ஷா.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மாணிக்கம், பாஷா என்ற இரண்டு பேரில் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அப்போது கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது என்று சொல்லலாம். பலரும் இந்தப் படத்தை திருவிழா போன்று கொண்டாடி இருந்தார்கள்.

- Advertisement -

பாட்ஷா படம் ஹாஸ்டேக்:

இந்நிலையில் இந்த படம் நேற்றோடு வெளியாகி 27 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சோசியல் மீடியாவில் #27yearsOfBaasha என்ற ஹேஷ் tag போட்டு பலரும் பாட்ஷா படத்தை பற்றி பகிர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் பிரபல இயக்குனர் தேசிங்குராஜா பெரியசாமியும் சின்ன பையனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பாட்ஷா படம் 27 ஆண்டுகள் நிறைவடைந்ததை பற்றி டிவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

தேசிங்கு பெரியசாமி பதிவிட்ட டீவ்ட்:

அவர் பதிவிட்டு இருக்கும் சின்ன பையன் வேற யாரும் இல்லைங்க தேசிங்கு பெரியசாமி சிறுவயதின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான். அவர் சிறுவயதாக இருக்கும்போது பாட்ஷா படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி பள்ளியில் நடந்த விழாவில் எல்லோரும் ஹிந்தி பாடலுக்கு நடனமாட சொன்னார்கள். ஆனால், அவர் தலைவரின் பாட்ஷா படத்தில் வந்த ஆட்டோக்காரன் பாடலுக்கு நடனமாடி கலக்கி இருந்தாராம். பின் பதிவில் அவர் பாட்ஷா பட அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம்:

தற்போது இவரின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேபோல் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி 2020 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படம் காதல், நகைச்சுவை திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, இரக்சன், நிரஞ்சனி அகத்தியன் உட்பட பலரும் நடித்திருந்தார்கள்.

ரஜினிகாந்த் பாராட்டியது:

இந்த படம் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தை பார்த்து மிகவும் இம்ப்ரெஸ் ஆகி இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். சூப்பர்ர்ர், அற்புதம் , ஹாஹாஹா, உண்மையில் நான் பழைய காலத்துக்குப் போயிட்டேன். வாழ்த்துகள். பெரிய எதிர்காலம் உங்களுக்கு இருக்கு என்று கூறி இருந்தார்.

Advertisement