அஜித்தின் இந்த படத்தை பார்த்துவிட்டு தான் சிவாவ கூப்டு கதை கேட்டேன் – ரஜினி வெளியிட்ட ஆடியோ.

0
445
rajini
- Advertisement -

விசுவாசம் படம் இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் ஆவதற்கு என்ன இருக்கு என்று ரஜினி பேசிய பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விசுவாசம் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்து இருந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விசுவாசம் படம் குறித்து தனது ஹூட் பக்கத்தில் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தொடங்கிய செயலி தான் ஹூட்.

-விளம்பரம்-

இந்த செயலியை ரஜினிகாந்த் தான் தொடங்கி வைத்து இருந்தார். மேலும், இவர் இதன் மூலம் தனது குரலிலேயே பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார். இந்நிலையில் இன்று ஹூட் செயலில் ரஜினிகாந்த் அவர்கள் திரைப்படங்களைப் பற்றியும், விசுவாசம் படத்தை பற்றியும் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பேட்டை திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். கபாலி, காலா திரைப்படங்களில் நான் வயசான ரோல் பண்ணியிருந்தேன். ஆனால், பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை ஸ்டைலாக, மாஸாக காட்டியிருந்தார். மேலும், பேட்ட படத்தின் போது தான் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விசுவாசம் படம் வெளியானது.

- Advertisement -

இரண்டு திரைப்படமுமே சூப்பர் ஹிட்டானது. விசுவாசம் திரைப்படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருப்பதால் அதனை பார்க்க வேண்டும் என்று நான் ரொம்ப ஆசைப்பட்டேன். பின் படத்தின் தயாரிப்பாளர் என்னுடைய நண்பர் தியாகராஜன் என்பதால் அவரிடம் கேட்டு விசுவாசம் படத்தை பார்த்தேன். படம் பார்த்தபோது நல்லாகத்தான் இருந்தது. மேலும், இடைவேளை வந்தது. அப்போது இந்த படம் இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் ஆவதற்கு படத்தில் என்னதான்? இருக்கு என நான் யோசனை செய்தேன்.

ஆனால், போகப்போக படத்தோட கிளைமாக்ஸ் வேற லெவல். படத்தின் கிளைமாக்ஸில் எக்சல்லெண்ட் ஆக இருந்தது. என்னை அறியாமலேயே நான் கை தட்டினேன். அதற்குப் பிறகு தான் நான் சிவாவை சந்தித்தேன். உண்மையிலேயே சிவா ஒரு குழந்தை மாதிரி. எனக்கு அவரைப் பார்த்த உடனே மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கு விசுவாசம் படத்திற்கு வாழ்த்துக்களை சொல்லி என்னுடைய படம் குறித்த கதை கேட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement