15 பள்ளி,16 முதியோர் இல்லங்கள்,19 கோசாலை – புனித் ராஜ்குமார் பிறந்தநாள் – ரஜினி சொன்ன அந்த வார்த்தை.

0
522
Puneeth
- Advertisement -

கன்னட திரையுலகில் பவர்ஸ்டாராக பப்பு என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்து வந்த புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

எண்ணற்ற உதவிகள் :

இவர் நடிகராக மட்டுமல்லாமல் இவர் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். அதேபோல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல்இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக கல்வி வழிவகை செய்துள்ளார். இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார்.

- Advertisement -

கர்நாடக ரத்னா விருது :

இப்படி ஒரு நிலையில் பெங்களூரில் மறைந்த கன்னட நடிகர் திரு புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவஞ்சலி விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் திரு ரஜினிகாந்த் பங்கேற்று இருந்தார். புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

இந்த விருது அர்ப்பணிப்பு விழா சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது. ரஜினி இந்த விருதை வழங்க புனீத்தின் மனைவி விருதை பெற்றுக்கொண்டார்.விருதை பெற்ற புனீத் ராஜ்குமாரின் மனைவி கண்ணீருடன் அந்த விருதை வாங்கிக்கொண்டார்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் நெகிழ்ச்சி :

இதை தொடர்ந்து இந்த விழாவில் புனீத் ராஜ்குமார் குறித்து பேசிய ரஜினிகாந்த்,”நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. “புனித் ஒரு மனிதநேயமிக்க மாமனிதர், ஏழைகளுக்கு உதவிகளை செய்துள்ளார். அவரது அந்த உதவியால் தான் இன்று மக்களின் மனதில் நீகிக்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். அவரது ஆத்மா பெரியது. தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் நல்ல படங்களை மட்டுமே நடிக்காமல் அதே போன்று உதவிகளையும் மக்களுக்கு செய்தார்.

இன்று பிறந்தநாள் :

அதே போல ஆந்திராவில் என்.டி.ஆர், கர்நாடகாவில் ராஜ்குமார் உள்ளிட்ட இருவருமே மக்களுக்கு அவர்கள் செய்த உதவியினாலும் மனித நேயத்தினாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களும் சேர்ந்துள்ளார் என நெகிழ்ந்து பாராட்டினார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மறைந்த புனித் ராஜ்குமாரின் பிறந்தநாள் இன்று ரசிகர்கள் கொண்டாடி இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் நடிகர் புனித்.

Advertisement