தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜீவா. இவருடைய தந்தை தான் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பெயரில் பல வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் கடைசியாக சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த மாரிசன் என்ற படத்தை தான் கடைசியாக தயாரித்திருந்தார். இது தான் இவருடைய 99 ஆவது படம். இப்படி 40 ஆண்டுகளுக்கு மேல் இவர் சினிமா துறையில் பயணித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்பி சௌத்திரி அவர்கள் இறந்திருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆர்.பி சௌத்ரி அவர்கள் தன்னுடைய சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்துக்கு தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமணத்த விழாவிற்கு கலந்து கொள்ள தனது மருமகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜூன்டா கிராமத்திற்கு அருகே வந்தபோது திடீரென்று சாலையில் மாடுகள் குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ரசுவரில் மோதியது. இந்த மோதலில் ஆர் பி சவுத்ரி அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். கார் ஓட்டுநர் அதிக படுகாயம் அடைந்திருக்கிறார். தன் தந்தையின் இழப்பை அறிந்த ஜீவா ரொம்பவே மனமடைந்து இருக்கிறார். இவருடைய இறுதி சடங்குகள் சென்னையில் நடக்கிறது. சவுத்ரி இழப்பை அறிந்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆர் பி சவுத்ரி இரங்கல்:
அந்த வகையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில், ஆர்வி சவுத்ரி உடன் நான் படம் பண்ணியது கிடையாது. இருந்தாலும் எனக்கு அவர் நெருங்கிய நண்பர். நிறைய முறை நாங்கள் சந்தித்து பேசி இருக்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு கூட அவர் என்னை ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது சந்திக்க வந்திருந்தார். அப்போது அவர், 99 படங்கள் எடுத்து விட்டேன். 100-வது படத்தை எடுத்து முடித்துவிட்டு ஓய்வு பெறப்போகிறேன்.
https://www.youtube.com/watch?v=z8Txn7WDNII
ரஜினி பேட்டி:
அந்த நூறாவது படத்தை நீங்கள் தான் செய்ய வேண்டும். மூன்று கதாசிரியர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டுவிட்டு கண்டிப்பாக செய்யவேண்டும் என்று சொன்னார். நானும் 100% சம்மதம் சொன்னேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு கே எஸ் ரவிக்குமார் சார் என்னிடம் பேசும்போது சவுத்ரி சார் எத்தனையோ இயக்குனர்களை உருவாக்கியுள்ளார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அவருக்கு ஒரு பெரிய விழா நடத்த வேண்டும் என்று சொன்னார். திரை உலகை காப்பாற்றிய ஒரு மாமனிதர் ஆர் பி சவுத்ரி. தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை கொடுத்தவர்.
https://www.youtube.com/watch?v=jc1ZGZ9CGQ8
ஆர் பி சவுத்ரி பற்றி சொன்னது:
மேலும், அவர் 99 படங்களை எடுத்திருந்தாலும் எந்த படத்திலும் பெரிய பிரச்சனை வந்ததில்லை. அப்படியே பிரச்சினை வந்தாலும் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுமூகமாக முடித்து விடக் கூடியவர். அந்த அளவிற்கு
ஒரு சிறந்த மனிதர். எப்போதுமே ரொம்ப புத்துணர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போகப் போகிறோம் என்று அடிக்கடி என்னிடம் சொல்லுவார். அவர் ஒரு அருமையான ஆத்மா. அவருடைய இந்த மரணம் எனக்கு ரொம்பவே வருத்தத்தை அளித்திருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும். அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






