கூலி படத்தின் விழாவில் நாகார்ஜுனா பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து இருந்தார்.

இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், படத்தில் விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெளியாகி வெற்றியை கண்டது. அதோடு மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனையும் செய்து இருந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.
ரஜினி திரைப்பயணம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினியின் 171வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

கூலி படம்:
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட நாயகன் ரஜினிகாந்த், மெயின் வில்லனாக நாகார்ஜுனாவை தேர்வு செய்த போது ஓகே சொல்ல மாட்டார் என்று நினைத்தேன்.

விழாவில் ரஜினி:
அவரை காசு பணம் கொடுத்து வாங்க முடியாது. வெங்கட் பிரபுவின் மங்காத்தாவில் அஜித் ஒரு டயலாக் சொல்லுவார். எத்தனை நாள் தான் நானும் நல்லவனாகவே நடிப்பது. அது நாகார்ஜுனாவிற்கு தான் பொருந்தும். இத்தனை நாட்கள் ஹீரோவாக நடித்து இன்று வில்லனாக நாகார்ஜுனா கலக்கி இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாகார்ஜுனாவை பார்க்கும் போது எனக்கு ஒரே ஷாக். இத்தனை வயதுக்கு பிறகும் கூட இன்னும் இளமையாக ஃபிட்டாக இருப்பதற்கான ரகசியம் என்ன என்று நான் அவரிடம் கேட்டேன்.
நாகார்ஜுனா பற்றி சொன்னது:
அதற்கு அவர் நான் மாலை 6:30 மணிக்கு இரவு உணவு முடித்து விடுவேன். உடற்பயிற்சி செய்வேன். உடலுக்கு எது ஒத்துக்கொள்ளும் ஒத்துக்கொள்ளாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்னார். நாகார்ஜுனா உடைய கதாபாத்திரத்தை கேட்டவுடன் நானே அந்த கதாபாத்திரத்தில் நடிக்கலாமா? என்றெல்லாம் தோன்றியது. எனக்கு எப்போதும் வில்லன் கதாபாத்திரங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அடிப்படையில் நான் வில்லனாக தான் சினிமாவுக்கு வந்தேன் என்று கூறி இருக்கிறார்.






