ரஜினி, கமல் மீண்டும் சேர்ந்து நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக திகழ்பவர்கள் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இருவருக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் என மக்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது.

இவர்கள் இருவரையும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது கே பாலசந்தர்தான். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரையும் வைத்து கே. பாலசந்தர் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
மேலும், சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
கமல்-ரஜினி குறித்த தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் கமல்-ரஜினி சேர்ந்து நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர்கள் இருவரும் சேர மாட்டார்களா? என்றெல்லாம் கூறப்பட்டது. பின் கடந்த 2020 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், கமலஹாசனும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. அதற்குப் பிறகுதான் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

கூலி படம்:
இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமா கேரியில் கமலுக்கு இந்த படம் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதற்குப் பிறகு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் கூலி படம்
வெளிவந்தது. இந்த படம் திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

ரஜினி-கமல் கூட்டணி:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனைகளையும் செய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கமல்- ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதாக கூறப்படுகிறது. அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தான் இருவருமே சேர்ந்து நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்தையும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் குறித்த அப்டேட்:
அது மட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மைல்கல் படமாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ரஜினி- கமல் இருவரின் கேரியரிலேயே ஒரு முக்கியமான படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினி-கமல் படத்தை முடித்த பிறகு தான் லோகேஷ் அவர்கள் கைதி 2 படத்தையும் எடுப்பார் என்றெல்லாம் கூறப்படுகிறது.






