தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் ரஜினி நடித்த கூலி படம் பான் இந்தியா அளவில் வெளியாகி வெற்றியை கண்டது. அதோடு மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனையும் செய்து இருந்தது.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்தடுத்து லைன் அப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவிலேயே அந்த படங்களுடைய அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ரஜினி அவர்கள் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றிருந்தார்.
ரஜினி குறித்த தகவல்:
அவர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆர்ட் ஆஃப் லிவிங் ஆசிரமத்திற்கு தான் சென்றிருந்தார். அங்கு ஆசிரமம் பற்றியும் அது தொடர்பான நகைச்சுவை அனுபவம் பற்றியும் ரஜினிகாந்த் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அந்த ஆசிரமம் எங்கு பார்த்தாலும் பசுமை, ஏரி, மக்கள் என்று ஒரு பிரம்மிப்பாகவும் ரம்மியமாகவும் இருந்தது. மக்களுடைய முகத்தில் புன்னகை இருந்தது. யானை, குதிரைகள், நூற்றுக்கணக்கான பசுக்கள் அங்கிருந்தது. அதுல ஒரு குதிரையினுடைய பெயர்
ரஜினி. நான் ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தங்கலாம் என்று தான் முதலில் திட்டமிட்டேன். ஆனால், கடைசியில் 15 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டேன்.

ரஜினி பேட்டி:
அப்போது குருதேவ் என்னிடம், ஆசிரமத்தை சுற்றி பார்க்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான், மக்கள் என்னை பார்த்ததும் சூழ்ந்து விடுவார்கள். ஆட்டோகிராப், போட்டோ எல்லாம் கேட்பார்கள். அதனால் ஆசிரமத்திற்கு தான் பிரச்சனை வரும் என்று நினைத்தேன். பின் அங்கிருந்த மக்கள் என்னை கண்டுபிடித்து விடுவார்கள் என்றெல்லாம் நான் நினைத்தேன். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரையும் நான் அங்கு பார்த்தேன். நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தார்கள். ஆனால், இருந்த ஒருவர் கூட என்னை திரும்பி பார்க்கவில்லை. இதுதான் உண்மை. புகைப்படம், ஆட்டோகிராப் இதெல்லாம் யாரும் கேட்கவில்லை.
View this post on Instagram
ஆசிரமம் அனுபவம்:
ஒருவர் கூட என்னை பார்க்கவோ பேசவோ நினைக்கவில்லை. நான் தாமதமாக சென்று கையை அசைத்தேன். ஆனால், யாருமே என்னை கவனிக்கவில்லை. நான் எத்தனையோ அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களையும் சந்தித்து இருக்கிறேன். ஆனால், இந்த அனுபவமே என் ஈகோவை உடைத்து விட்டது. திரை உலக ஸ்டார்டம் என்பது வந்து போகக் கூடியது. அது கொஞ்ச காலத்திற்கு தான் நிலைக்கும். ஆனால், இந்த ஆன்மீக ஸ்டார்டம் என்பது உண்மையான சுப்ரீம் ஸ்டார்டம். மரணத்திற்கு பிறகும் கூட இந்த ஸ்டார்டம் அப்படியே இருக்கும். சொல்ல போனால் அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறுகிறார்.






