கடந்த ஆண்டு தாதா சாகிப், இந்த ஆண்டு வருமான வரித்துறை விருது – ரஜினிக்கு பதில் சென்று வாங்கி இருப்பது யார் பாருங்க.

0
480
rajini
- Advertisement -

கடந்த ஆண்டு தாதா சாகிப் விருது கிடைத்த நிலையில் இந்த ஆண்டு ரஜினிக்கு வருமான வரித்துறை விருது வழங்கி இருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது முதல் நிதியமைச்சராக பதவி வகித்தவர் சர் ஜேம்ஸ் வில்சன்.இவர் கடந்த 157 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 1860 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நாட்டின் முதல் நிதி அமைச்சராக பதவியேற்று வருமான வரியை இந்தியாவில் அறிமுகம் செய்தார். அப்போது செல்வந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு அவர் வரி விதித்தது பலரது கோபத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

முதன்முதலில் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்டப்போது அரசுக்கு ரூ.30 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது இந்தியாவில் கிடைக்கும் வருமான வரி ரூ.10 லட்சம் கோடியாக வளர்ந்து நிற்கிறது. மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே வரி விதிப்பு இருந்தாலும் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய வருமான வரி முறையே தற்போது சட்டத் திருத்தங்களுடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

- Advertisement -

வருமான வரி விழா :-

வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் தேதி ஆண்டுதோறும் வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சென்னையில் வருமான வரி விழா :

இந்த நிலையில் நேற்று சென்னை டிடிகே சாலையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் நடந்த இந்த விழாவில், தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

தமிழ் திரையுலகில் அதிகசம்பளம் வாங்கும் ரஜினி :-

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்க உள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க உள்ளது.ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.150 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சூப்பர்ஸ்டார் விளங்குகிறார்.

நடிகர் ரஜினிகாந்திற்கு விருது :-

இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் அதிக வருமான வரி செலுத்தியவர்கள் வருமான வரித்துறையால் கவுரவிக்கப்பட்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வருமான வரித்துறை செலுத்தியதற்காக விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்தின் சார்பாக அவரது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருது வழங்கி கவுரவித்தார்.

Advertisement