-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பயந்த தயாரிப்பாளர், நம்பிக்கை வைத்த கலைஞானம் – ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற படத்துக்கு முதல் அச்சாரம் போட்ட பைரவி.

0
1988

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். ஆனால், அவருக்கு முதன் முதலில் ஹீரோ என்ற அந்தஸ்த்தை கொடுத்தது பைரவி திரைப்படம் தன. தன்னிடம் இருந்த அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் கதையாக படமாக்க முயற்சித்த திரைக்கதை ஆசிரியர் கலைஞானம், பிரபல தயாரிப்பாளரான சின்னப்ப தேவரை நம்பியிருந்தார். இதற்கு அவர் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிக்க பின்னர் பிரதான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருப்பதை அறிந்த பின்னர் பின் வாங்கினார்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமாக அதுவரை சோலோ ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்ததில்லை என்பதால், படம் தோல்வி அடைந்தால் போட்ட பணம் வீணாகிவிடுமோ என்கிற அச்சத்தால் தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் பின் வாங்கியதாக கூறப்பட்டது. அத்துடன் அந்த காலகட்டத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஸ்ரீகாந்தை வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாகவும் நடிப்பதற்கு கடுமையான ஆட்சோபனை தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்த கதாபாத்திர படைப்புடன் படத்தை எடுப்பதில் விடாப்பிடியாக இருந்த கலைஞானம், ரஜினிகாந்த் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி தேவரை சம்மதிக்க வைத்து படத்தை உருவாக்கினார்.14.1.78 பொங்கல் தினத்தன்று பைரவி படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. படத்துவக்க விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாண்டோ சின்னப்பா தேவர் கலந்து கொண்டு படத்தைதொடங்கி வைத்தனர்.

-விளம்பரம்-

கலைஞானம் ரஜினிக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசிய பிறகு 50 ஆயிரமாக உயர்த்தி தந்த காரணத்தை ரஜினியே கலைஞானம் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்பேசி வெளிப்படுத்தி இருப்பார். ஒன்பது லட்சம் ரூபாயில் தயாரான படம் பைரவி. பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களிடம் உதவியாளராக இருந்த எம் பாஸ்கர்.என்பவரை இயக்குனராகினார். இந்தப் படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை கலைப்புலி தானுவும்,பெங்களூர் திருச்சி ஏரியா உரிமையைபெற்றவர். காதர் என்ற பெயரில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்த நடிகர் ராஜ்கிரன்.

-விளம்பரம்-

சென்னையில் பிளாசா திரையரங்கில் 35 அடி கட் வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் பைரவி என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தனி கதாநாயகனாக நடித்த இந்த படம் கலைஞானத்தின் தைரியம். அறிமுக இயக்குனர் பாஸ்கரின் நம்பிக்கை, சூப்பர் ஸ்டாரின் கடினமான உழைப்பை பார்த்து எள்ளி நகையாடியவர்களுக்கு படத்தின் மாபெரும் வெற்றி சாட்டை அடிபதிலாக அமைந்தது. படம் சென்னையிலும் கோவை இருதியாதியேட்டரிலும் 100 நாட்கள் ஓடியது படத்தின் வெற்றி விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேவரும் கலந்து கொண்டனர்

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மேட்டுப்பாளையம் அருகில் இரண்டு பனை மர உயர அளவிலான கரடு முரடான பாறைகளின் உச்சியில் ஏப்ரல் மாதம் கோடை வெயிலில் படமாக்கப்பட்டது. அப்போது ரஜினி கோடை வெயில் எல்லாம் பொருட்படுத்தாமல் மிகச் சிறப்பாக அந்த காட்சியை நடித்துக் கொடுத்தார் என்று கலைஞானம்தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.இனி எவராலும் கனவில் கூட தொட முடியாத 45 வருடசூப்பர் ஸ்டார் சிம்மாசனத்துக்கு அச்சாரம் போடபட்ட பைரவி என்னும் திரைக்காவியம் வெளியாகி 45 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news