தமிழ் சினிமா திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “தர்பார்” படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வருகின்றன. மேலும், தர்பார் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் எனவும் தெரியவந்து உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றது. அதுவும் சில தினங்களுக்கு முன் தான் வெற்றிகரமாக முடிந்தது. மேலும், லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும்,இந்த படத்திற்கு அனிரூத் அவர்கள் இசை அமைத்து உள்ளார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

மேலும், இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தார்கள். ஏனென்றால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனால் தான் தர்பார் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளார்கள். மேலும்,இந்த தர்பார் படத்தில் யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் வியாபாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சன் பிக்சர்ஸ்,வேல்ஸ் பிலிம்ஸ் என மிக பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் தர்பார் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற போராடி வருவதாக தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : டிடி, ஆல்யா மானஸாவிற்கு எல்லாம் என்ன தகுதி இருக்கு. கழுவி ஊற்றும் ரசிகர்கள். காரணம் இது தான்.

Advertisement

இது மட்டுமில்லாமல் திரைப்படத் துறையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்கள் போட்டி போடுவது வழக்கமான ஒன்று. ஆனால், அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடிக்கு அடுத்த படியாக இருக்கும் முக்கியமான ஒருவரின் பின்னணியில் தர்பார் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தை வாங்க இத்தனை பேர் போட்டி போடுவதை பார்த்து லைகா புரொடக்ஷன் நிறுவனம் படத்தின் விலையை அதிகரித்து விட்டது. அதாவது 70 கோடி மேல் விலையை நிர்ணயித்து உள்ளது என தெரிய வந்துள்ளது.

ஆனால், படத்தை வாங்க நினைக்கும் நிறுவனம் 60 கோடி ரூபாய் என நிர்ணயித்துள்ளது. ஏனென்றால் பேட்ட படம் வெளியாகி 54 கோடி வசூல் செய்தது. அதனால் தயாரிப்பாளர் நிறுவனம் இந்த தர்பார் படத்தை வாங்க 60 கோடி ரூபாய் என முடிவு செய்தார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் போடும் போட்டியை பார்த்து லைகா நிறுவனம் தன்னுடைய விலையிலிருந்து கொஞ்சம் கூட குறைக்காமல் பிடிவாதம் பிடித்து வருகிறார்கள். இந்த விவகாரம் அறிந்ததும் ரஜினிகாந்த் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும்,லைகா நிறுவனத்திற்கு ஏன் இந்தப் பேராசை. இவர்கள் இப்படி செய்வதனால் தான் எனக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வருகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Advertisement
Advertisement