டிடி, ஆல்யா மானஸாவிற்கு எல்லாம் என்ன தகுதி இருக்கு. கழுவி ஊற்றும் ரசிகர்கள். காரணம் இது தான்.

0
179904
dd-alya
- Advertisement -

வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்களுக்கு சமமாக சின்னத்திரையில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தற்போது இருக்கும் கால கட்டங்களில் மக்கள் படங்களைப் பார்ப்பதை விட டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எல்லா சேனலிலும் வித்தியாசமான கதை களம் கொண்ட தொடர்களையும், புது புது நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் மிகப் பிரபலமான சேனல் என்று சொன்னால் விஜய் டெலிவிஷனை சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் மற்ற சேனல்களில் எல்லாம் விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை பெயரை மாற்றி ஒளிபரப்பும் செய்கிறார்கள். அந்த அளவிற்கு விஜய் டெலிவிஷன் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும், விஜய் டெலிவிஷனில் தொடர்கள் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பப்பட்டு வேற லெவல்ல தெறிக்க விடுகிறார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

உதாரணத்திற்கு ஜோடி நம்பர்-1, கலக்கபோவதுயாரு தொடங்கி தற்போது இருக்கும் பிக் பாஸ் வரை சொல்லலாம். இப்படி நல்ல விமர்சனங்களை வாங்கி உள்ளது விஜய் டெலிவிஷன். ஆனால், இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் வாங்கிய மொத்த பெயரும் போய்விடும் போல் உள்ளது. இந்நிலையில் இந்த விஜய் சேனலில் “டான்சிங் சூப்பர் ஸ்டார்” என்ற ஒரு டான்ஸ் ஷோ புதுசாக அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரே விஜய் டெலிவிஷனில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1, கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல நடன நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்கள்.

இதையும் பாருங்க : இயக்குனரின் மகளை மணக்கும் காமெடி நடிகர் சதீஷ். திருமணம் எப்போது தெரியுமா ?

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது என்றும் சொல்லலாம். ஆனால், இந்த முறை இவர்கள் ஒளிபரப்பும் “டான்ஸ் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியில் போட்டியாளர்களினால் மக்கள் வருத்தப்படவில்லை. அதில் பங்கேற்கும் நடுவர்கள் மீது தான் கடுப்பாகி விட்டார்கள் என்றும் தெரிய வருகிறது. ஏனென்றால் இந்த டான்ஸ் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சாண்டி, ஆலியா மானசா, டிடி என்கிற திவ்யதர்ஷினி, சுனிதா,மகத் என 5 பேரும் ஜட்ஜாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். மேலும்,இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரியோவும்,ஆண்ட்ருசும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். இதனால், இந்த நிகழ்ச்சி மிக மோசமாக போக போகிறது என்று இணையங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும்,சாண்டி ஒரு நடன மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆலியா மானசாவும் , சுனிதாவும் நடனத்தின் மூலம் நிறைய பரிசுகளையும், விருதுகளையும் வாங்கியுள்ளார் என்றும் சொல்லலாம். இந்நிலையில் டிடி என்கிற திவ்யதர்ஷினி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர், மகத் ஒரு திரைப்பட நடிகர். இப்படி நடனம் பயின்றவர்கள் மத்தியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவருக்கும், நடிகருக்கும் என்ன வேலை? இவர்களை ஜட்ஜஸ் என்று சொல்வது மிகவும் தவறான விஷயமாக உள்ளது என்றும் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நடுவர்கள் என்றால் நடனத்தில் பல திறமைகளையும், சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் டி டி, ஆல்யா மானஸா இவர்கள் எல்லாம் எப்படி ஒரு நல்ல டான்ஸ்சரை தேர்ந்தெடுப்பார்கள். அதோடு டான்சிங் சூப்பர் ஸ்டார் என்று பெயரை வைத்து காமெடி நடுவர்கள் உள்ளார்களே???என சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை தெரிவித்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement