விவாகரத்து அறிவித்த சில மாதத்திலேயே ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஒரு சோகமா – அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
402
dhanush
- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே கொரோனாவின் தாக்கம் இந்தியாவை விட்டு செல்லவில்லை. இதனால் லட்சக்கண மக்கள் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகிறார்கள். கொரோனா தாக்கத்தால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு கொரோனா வைரசின் அடுத்த நிலையான ஓமைக்கரான் வைரஸ் பரவல் தற்போது இருப்பதால் தொற்று பரவல் இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், மக்கள் கோவிட் தடுப்பூசி போட்டும், முக கவசம் அணிவதை நிறுத்த கூடாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் கொரோனா குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

கொரோனா பாதித்த நடிகர்கள்:

அதிலும் சமீப காலமாகவே பிரபலங்கள் பலரும் கொரோனா மற்றும் ஓமைக்காரனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கமலஹாசன், வடிவேல், அருண் விஜய், திரிஷா, சத்யராஜ், மீனா, பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, மலையாள பட இயக்குநர் பிரயதர்ஷன் உள்ளிட்ட பல பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே சோசியல் மீடியாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு:

மேலும், இது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த போதிலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். அனைவரும் முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரின் புகைப்படமும், பதிவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா- தனுஷ் விவகாரம்:

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா தனுஷ். இவரும் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். தற்போது ஆல்பம் சாங் ஒன்று எடுப்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் தனுஷை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், 18 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த சமயத்தில் இருவரும் பிரிந்து போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தார்கள்.

ஐஸ்வர்யா பதிவை வைரலாகும் நெட்டிசன்கள்:

இவர்களின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது தனுஷுக்கு தெரியுமா? இரண்டு பேரும் சேர்ந்து விட்டார்களா? என்று பல கேள்விகள் ரசிகர்கள் எழுப்பி வருகிறர்கள். அதோடு சோசியல் மீடியாவில் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா தனுஷ் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் சேருவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement