வீடு திரும்பிய ரஜினி , ஆரத்தி எடுத்து வரவேற்ற மனைவி. வைரலாகும் புகைப்படம்.

0
1113
rajini
- Advertisement -

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருந்த நிலையில் படப்பிடிப்புக் குழுவில் சிலருக்கும் கொரோனா ஏற்பட்டதால் ரஜினிகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது . இபப்டி ஒரு நிலையில் கடந்த 25 ஆம் தேதி ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுபவிக்கப்பட்டார் .

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க ரஜினிகாந்த் நிலை குறித்து இறுதியாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் நேற்றைவிட இன்று நிலைமை முன்னேறி உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் வேறு எந்த ஒரு கவலை தரக்கூடிய அம்சமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று மீண்டும் அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் கூறி இருந்தனர்.

இதையும் பாருங்க : துவங்கியது இந்த வார நாமினேஷன் – இந்த ரெண்டு பேர்ல யாரு போவாங்கன்னு பாருங்க.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ரஜினி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தார். ரஜினி உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும், ரஜினிகாந்த் ஒருவாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் எளிதான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறித்தியுள்னனர். இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 27) மாலை சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைந்தார். ரஜினிகாந்த் உடன் அவருடைய மகள் சவுந்தர்யா காரில் அமர்ந்திருந்தார். சென்னை வந்தடைந்து தனது வீட்டிற்கு சென்ற ரஜினியை, அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஜினியின் உடல் நிலை இப்படி இருக்க ரஜினி திட்டமிட்டபடி 31-ம் தேதி புதிய கட்சியை ரஜினிகாந்த் அறிவிப்பாரா? என  ரஜினி ரசிகர்கள் இடையே  எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
Advertisement