சர்க்கார் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்ததா அண்ணாத்த – ட்விட்டரில் மோதிக்கொண்ட விஜய் – ரஜினி ரசிகர்கள்.

0
500
sarkar
- Advertisement -

சோசியல் மீடியாவில் மோதி கொள்ளும் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் யாருடைய படம் அதிக வசூலை பெற்றது என்று கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக பல்வேரு மீம்ஸ்கள் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். மேலும், இந்த படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
Image

இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. அண்ணாத்த படத்தின் முதல்நாள் தமிழ்நாடு கலக்சன் 25 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், உண்மையிலேயே அண்ணாத்த படத்தின் முதல்நாள் தமிழ்நாடு வசூல் 34 கோடிக்கு மேல் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 32 கோடி முதல் நாள் கலெக்சனில் இருந்த சர்க்கார் படத்தை தற்போது அண்ணாத்த படம் முந்தி உள்ளது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடும், வாக்குவாதமும் நடைபெற்று வருகிறது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்க்கார்.

இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. இந்த படம் வெளிவந்த முதல் நாளன்றே கோடிக்கணக்கில் வசூல் செய்தது குறித்து சோசியல் மீடியாவில் வெளியானது. மேலும், தமிழ் சினிமா வரலாற்றிலேயே விஜய்யின் சர்க்கார் படம் தான் முதல் நாளில் வசூல் சாதனை செய்தது.

-விளம்பரம்-

இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில் ரஜினியின் அண்ணாத்த படம் விஜய்யின் சர்க்கார் படத்தை விட முதல் நாள் வசூலில் முந்தி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்துப் போய் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும்,சர்க்கார் படம் தான் முதல் நாள் வசூல் கிங் என்று விஜய் ரசிகர்கள் ஒருபுரமும், ரஜினியின் 2.0 படம் அந்த சாதனையை முறியடித்து விட்டது என்றும் ரஜினி ரசிகர்கள் ஒரு புறமும் கூறிக்கொண்டு வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தில் பாத்துக்கலாம். யார் முன்னாடி யார் பின்னாடி என்றும், சர்க்கார் என்று சொல்லு இல்லனா அவ்வளவுதான் என்றும் தாறுமாறாக கமெண்டுகளை போட்டுவிடுகிறார்கள். இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் நீ படிக்கும் ஸ்கூலில் நான் வாத்தியார் என்று பதிலடி கொடுத்து உள்ளனர். இப்படி இரு தரப்பினரும் மாத்தி மாத்தி தங்களுடைய நடிகர்களின் புகைப்படங்களை பதிவிட்டு வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.

Advertisement