காலில் விழ சென்ற ரஜினி, தடுத்து நிறுத்தி அமிதாப் பச்சன் செய்த செயல் – இதோ வீடியோ

0
389
- Advertisement -

அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப்பச்சன் காலில் வேகமாக ரஜினிகாந்த் விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலக அளவில் மிக பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்த பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு முந்தையாக நடைபெற இருக்கும் விழாக்கள் எல்லாம் கோலாகலமாக நடந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் தான் திருமண விழா தொடங்கியது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்றது.

- Advertisement -

அம்பானி வீட்டு திருமணம்:

உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் இந்த திருமணத்தில் இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர்கள், திரையுல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச பிரபலங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை ராதிகா- ஆனந்த் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

திருமணம் குறித்த தகவல் :

அம்பானி வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களாக கலந்து கொண்ட பிரபலங்களுக்கு 2 கோடி மதிப்பிலான ‘ஓடோமா பிகே வாட்சை’ ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 5000 கோடி வரை திருமண செலவு ஆனதாக கூறப்படுகிறது. நடந்த முடிந்த அம்பானி வீட்டு திருமண விழாவில் பல பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து வந்து இருந்தார்கள். அந்த வகையில் பிரம்மாண்டமாக நடந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தன் குடும்பத்துடன் பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

காலில் விழுந்த ரஜினி:

திருமணத்தில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், இளைய மகள் சௌந்தர்யா, மருமகன், பேரனுடன் கலந்து கொண்டார். இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து உற்சாகத்தில் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவும் வைரலாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் அமிதாப்பச்சனின் காலில் ரஜினிகாந்த் விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது உலா வருகிறது. அதாவது, திருமணத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பச்சனை பார்த்த உடன் அவருடைய காலில் விழுந்து வணங்க முயற்சித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி-அமிதாப் கூட்டணி:

உடனே அமிதாப் அதை தடுத்து ரஜினிகாந்தை கட்டி அணைத்து கொண்டார். பின் இருவரும் கைகுலுக்கிக் கொண்டு சிறிது நேரம் பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவை பார்த்து பலரும் ரஜினியை பாராட்டி வருகிறார்கள். காரணம், ரஜினி புகழின் உச்சிக்கு சென்றாலும், வயதானாலும் தனக்கு முன்னோடியாக இருப்பவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு ஒரு தனி குணம் தேவை என்று கூறி வருகிறார்கள். இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களுமே கடைசியாக இணைந்து நடித்த படம் ‘ஹம்’. 32 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவருமே ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வேட்டையயன்’ படத்தில் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement