ஆசைப்பட்ட ரசிகரின் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சூப்பர் ஸ்டார். வைரலாகும் புகைப்படம்.

0
2997
rajini
- Advertisement -

சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் அவருடைய ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். அதனாலேயே தான் இவர் இன்று வரை சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கொண்டாடுகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளி வந்த எல்லா படமுமே மரண மாஸ் . மேலும், நடிகர் ரஜினி காந்த் அவர்கள் ஒட்டு மொத்த சினிமா உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் தலைவர் ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்புக்கும், ஸ்டைலுக்கும் என ஒரு தனிப்படை உள்ளது. தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் சினிமா உலகில் வந்த ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் பட்டாளம் தற்போது வரை குறையாமல் கூடிக் கொண்டே தான் போகிறது. அவருடைய படங்கள் என்றாலே போதும் திருவிழா போன்று கோலாகலமாக பல நாடுகளில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் மீது அதிக அன்பும், மரியாதையும் உள்ள தீவிர ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தை சந்திக்க வந்து உள்ளார். ஏன் என்றால், அவர் தன் மூழு மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியின் ஆசையை நிறைவேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க வந்து உள்ளார்.

அவர் மனைவிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கையால் வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாம். இதனால் தான் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து அவர் கையால் வளைகாப்பு நடத்தி உள்ளார். நம்ம தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் தந்தை ஸ்தானத்திலிருந்து அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வளையல் போட்டு உள்ளார். மேலும், அந்த ரசிகர் ரஜனி காந்த் உடன் எடுக்கப் பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Image

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தை பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Image

அதோடு ரஜினிகாந்தின் ‘தலைவர் 168’ படத்தின் பூஜைகள் நடை பெற்றது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் ஆரவாரம் செய்து வருகிறார்கள். சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது.

Advertisement